திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விரைவில் உருவாகும் ஜீவா நடித்த சூப்பர்ஹிட் படத்தின் 2ம் பாகம்.. கம்பெனிக்காக வாசனை நடிகரிடம் கெஞ்சும் பரிதாபம்

ஜீவா திரை குடும்பத்தைச் சார்ந்தவர் என்றாலும் சினிமாவுக்கு வந்த புதிதில் தன் திறமையால் நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆனால் அதன் பின்பு அவருடைய படத்தேர்வு சரியாக இல்லாததால் தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்து வருகிறார். அதுமட்டுமின்றி அவருக்கு இப்போது ஹீரோ வாய்ப்பும் குறைந்து விட்டது.

அதாவது சமீபகாலமாக இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் படங்களில் தான் ஜீவா நடித்து வருகிறார். இப்போது மீண்டும் பழையபடி வரவேண்டும் என்பதற்காக ஜீவா முக்கிய முடிவு ஒன்று எடுத்துள்ளாராம். அதாவது இப்போது இரண்டாம் பாக படங்கள் நிறைய வெளியாகி வெற்றி பெற்று வருகிறது. ஆகையால் தன்னுடைய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

Also Read : ஒருவருக்கு பதிலாக வேறொருவரை நடிக்க வைத்த 6 கதாபாத்திரங்கள்.. சிம்புக்கு பதிலாக நடித்த ஜீவா

அதாவது கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் சிவா மனசுல சக்தி. இப்படம் அப்போது உள்ள இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் ஜீவா, ராஜேஷ் இருவருக்குமே மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தது.

எஸ் எம் எஸ் 2 படம் இந்த வருடம் தொடங்கப்பட உள்ளதாம். அதாவது இயக்குனர் ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியின் படத்தை இயக்கி வருகிறார் இப்படம் முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் ஜீவாவும் இயக்குனர் பா விஜய் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

Also Read : 5 படங்களால் ஆர் பி சௌத்ரி கையில் கூரையை பிச்சிக் கொட்டின கோடிகள்.. மொத்தமாய் ஏமாற்றிய ஜீவா

ஆகையால் அடுத்ததாக இவர்கள் இருவரும் இணைந்து சிவா மனசுல சக்தி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளனர். ஆனால் இந்த படம் அப்போது மிகப்பெரிய வெற்றி அடைவதற்கு முக்கிய காரணம் நடிகர் சந்தானம் தான். ஜீவாவுக்கு இணையான கதாபாத்திரம் சந்தானத்திற்கும் கொடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது இரண்டாம் பாகத்தில் சந்தானம் நடிக்க வாய்ப்பு குறைவுதான். ஏனென்றால் அவர் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருவதால் இந்த வாய்ப்பை மறுத்து விட்டாராம். ஆனாலும் சந்தானம் நடித்தால் தான் ஹிட் ஆகும் என படக்குழு அவரிடம் கெஞ்சி கேட்டு வருகிறார்கள். இருந்தபோதும் சந்தானம் விடாப்பிடியாக இருந்து வருகிறாராம்.

Also Read : அரச்ச மாவையே அரச்ச கதையில் 5 நகைச்சுவை படங்கள்.. ஆர்யா, ஜீவாக்கு செட்டானது, கொஞ்சம் கூட செட்டாகாத விஷால்

Trending News