ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

குண்டாக இருப்பதால் வந்த உருவ கேலி.. 100 கிலோ வரை எடையை குறைத்த பிரபல வாரிசின் ரகசியம்

பிரபலமாக இருந்தாலே அவர்களை சுற்றி சர்ச்சைகளுக்கு பஞ்சம் இருக்காது. அப்படித்தான் உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஒருவரின் வாரிசு தன்னுடைய உடல் எடையின் காரணமாக ஏராளமான உருவ கேலியை சந்தித்தார். ஆனால் அதையே ஒரு வைராக்கியமாக எடுத்துக் கொண்டு இப்போது அவர் 100 கிலோவிற்கு மேல் தன் எடையை குறைத்து கெத்து காட்டி இருக்கிறார்.

அவர் வேறு யாரும் அல்ல உலக பணக்காரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி தான். வெளிநாட்டில் தன்னுடைய படிப்பை முடித்துவிட்டு அப்பாவின் தொழிலில் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவருக்கு சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. ராதிகா மெர்ச்சன்ட் என்ற பிரபல தொழிலதிபரின் மகளை காதலித்து வந்த இவர் தற்போது தன் காதலியை கரம் பிடிக்க தயாராகி இருக்கிறார்.

Also read: அம்பானி பையனுக்கு பொண்ணு கிடைச்சாச்சு.. வைரலாகும் பிரம்மாண்ட நிச்சயதார்த்த புகைப்படங்கள்

இப்போது கணிசமான உடல் எடையுடன் இருக்கும் ஆனந்த் அம்பானி இதற்கு முன்னதாக அதிகபட்ச எடையுடன் தான் காணப்பட்டார். அதாவது அவருடைய உடல் எடை சில வருடங்களுக்கு முன்பு வரை 208 கிலோவாக இருந்தது. இதையே சோசியல் மீடியாவில் பலரும் கேலியும் கிண்டலும் செய்து வந்தனர். ஆனால் அவர்களெல்லாம் அதிர்ச்சியாகும் வகையில் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய ஒரு போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்.

அதில் அவர் பலரும் வியக்கத்தக்கும் வகையில் தன் உடல் எடையை குறைத்து இருந்தார். அதன்படி அவர் உடற்பயிற்சி, யோகா, டயட் ஆகியவற்றை மேற்கொண்டு 100 கிலோவுக்கு மேல் தன் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்தார். இது பலருக்கும் ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியும் கொடுத்தது. மேலும் இது எப்படி அவரால் முடிந்தது என்று பலரும் ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வந்தனர்.

Also read: மீண்டும் ஓடிடி-யில் மல்லுக்கட்டும் வாரிசு, துணிவு.. ஒரே நாளை குறி வைத்த அமேசான், நெட் பிளிக்ஸ்

உண்மையில் ஆனந்த் அம்பானியின் இந்த மாற்றத்திற்கு பின்னால் பல கடின உழைப்பு இருக்கிறது. அந்த வகையில் இவர் கிட்டதட்ட 18 மாதங்கள் தன் உடல் எடையை குறைப்பதற்காக கடுமையாக போராடி இருக்கிறார். அதிலும் ஒரு நாளைக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை இவர் உடற்பயிற்சி செய்வாராம். இதற்காக அவர் பிரத்தியேகமாக ஒரு ட்ரெய்னரை வரவழைத்து பயிற்சி எடுத்திருக்கிறார்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமின் பயிற்சியாளர் வினோத் சன்னா தான் ஆனந்த் அம்பானிக்கும் முறையான பயிற்சியை கொடுத்திருக்கிறார். அதன் காரணமாகவே அவர் மிக விரைவில் தன்னுடைய உடல் எடையை குறைத்தாராம். இது பலரின் பாராட்டையும் பெற்ற நிலையில் தற்போது அவருடைய திருமண நிச்சயதார்த்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. அந்த வகையில் அம்பானியின் வாரிசான இவர் உருவ கேலியை எதிர்த்து மேற்கொண்ட இந்த கடின உழைப்பிற்கான ரகசியம் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also read: சின்னத்திரையின் TRPயை எகிற வைக்கும் 5 படங்கள்.. தொலைக்காட்சியில் பட்டையை கிளப்பும் ரஜினி படம்

Trending News