திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தனியாக தலைவர் மாலத்தீவு சென்றதன் ரகசியம்.. 2 படங்கள் முடித்தும் நிம்மதி இல்லாத பொழப்பு

Actor Rajini: சூப்பர் ஸ்டார் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் அடுத்த மாதம் திரையரங்குகளை அலங்கரிக்க இருக்கிறது. சமீபத்தில் வெளிவந்த இதன் முதல் மற்றும் இரண்டாம் பாடல் பட்டையை கிளப்பிய நிலையில் சில விவாதங்களுக்கும் ஆளானது. ஆனாலும் தற்போது சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இந்த பாடல்கள்தான் கலக்கிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சூப்பர் ஸ்டார் இப்போது தனியாக மாலத்தீவு சென்ற விஷயம் தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் தன்னுடைய காட்சிகளை முடித்துக் கொடுத்த ரஜினி உடனே மாலத்தீவுக்கு பயணம் ஆனார். அடுத்தடுத்த படங்களில் நடித்ததால் ரிலாக்ஸ் செய்வதற்காகவே அவர் இந்த பயணத்தை மேற்கொண்டதாக பலரும் நினைத்தனர்.

Also read: நான் யானை இல்ல குதிரை! சூப்பர் ஸ்டார் சொன்ன வார்த்தை.. நெல்சனை வைத்து தலைவர் ஆடும் ஆடு புலி ஆட்டம்

ஆனால் உண்மையில் தீராத மன உளைச்சலால் தான் சூப்பர் ஸ்டார் மாலத்தீவு பக்கம் சென்றிருக்கிறார் என வெளிவந்துள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வழக்கமாக சூப்பர் ஸ்டார் புத்துணர்ச்சிக்காக இமயமலைக்கு தான் செல்வார். ஆனால் இந்த முறை மாலத்தீவு சென்றதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கிறது.

அதாவது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ முடிவு செய்து தங்கள் விவாகரத்து அறிவிப்பையும் வெளியிட்டனர். இது ஒட்டு மொத்த திரையுலகையும் கடும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. அதை தொடர்ந்து பல்வேறு விதமான கருத்துக்களும், விமர்சனங்களும் எழுந்தது. இருப்பினும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பணிகளில் கவனத்தை செலுத்தி வந்தனர்.

Also read: 2ம் திருமணத்திற்கு அடி போட்ட ஐஸ்வர்யா.. என்னடா வாழ்க்கை இது என மாலத்தீவு கிளம்பிய ரஜினி

ஆனால் ரஜினி தரப்பில் இருந்து இந்த பிரச்சினையை முடித்து வைக்க பல முயற்சிகள் நடந்தது. ஆனால் அவை பயனளிக்காமல் போன நிலையில் சூப்பர் ஸ்டார் இதை இப்படியே விடக்கூடாது என்று அதிரடி ஆக்சனில் இறங்கி இருக்கிறார். அதாவது தற்போது மாலத்தீவு சென்றிருக்கும் அவர் அங்கு தன் மகள், மருமகனை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளாராம்.

தன் பேரன்களின் எதிர்காலத்திற்காக இந்த முடிவை எடுத்துள்ள சூப்பர் ஸ்டார் விரைவில் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அங்கு வரவழைத்து மீட்டிங் போட முடிவு செய்து இருக்கிறார். அதன் காரணமாகவே தற்போது அவர் முதல் ஆளாக அங்கு சென்றுள்ளார். அந்த வகையில் விரைவில் இந்த பஞ்சாயத்து முடிந்த கையோடு குடும்பத்துடன் ஒன்றாக இணைந்த நல்ல செய்தியையும் தனுஷ் தரப்பில் இருந்து வெளியிடுவார்கள் என கோடம்பாக்க வட்டாரத்தில் பேசி வருகின்றனர்.

Also read: நெல்சனை வைத்து பக்காவாக காய் நகர்த்திய ரஜினி.. இந்த 3 படங்களையும் ஓரங்கட்டிய ஜெயிலர்

Trending News