புதன்கிழமை, ஜனவரி 15, 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன சீக்ரெட்.. ஏற்றுக்கொள்வார்களா.?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையை சமீபத்தில் முறித்துக் கொண்டனர். உறவினர்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் அவர்களை மீண்டும் ஒன்று சேர வைக்க வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால் இவர்கள் இருவருமே தாங்கள் எடுத்த முடிவில் உறுதியாக உள்ளனர்.

ஆனால் ஐஸ்வர்யா, தனுஷ் இருவருமே தங்களது மகன்களுடன் தனி தனியாக நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். மேலும் தனுஷ் தன்னுடைய பட வேலைகளில் மிக பிஸியாக உள்ளார். இந்நிலையில் தற்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி ஆகிய படங்களில் தனுஷ் நடித்து வருகிறார்.

அதேபோல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் படங்களை இயக்கி வருகிறார். சமீபத்தில் ராகவா லாரன்ஸின் படத்தை ஐஸ்வர்யா இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

மேலும் அடிக்கடி தான் செய்யும் கடுமையான உடற்பயிற்சி புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஐஸ்வர்யா உடலை எப்படிப் பாதுகாத்துக் கொள்வதற்கான சிகரெட்டை சொல்லியுள்ளார். அதில் ஒரு மனிதன் 108 நமஸ்காரம் செய்தால் அவருடைய உடலின் மேற்பகுதி வலுப்பெறும்.

மேலும், வாரத்தில் மூன்று நாட்கள் ஸ்குவாட் பயிற்சி செய்து வந்தால் உடலின் கீழ் பகுதி வலுப்பெறும். ஒவ்வொருவரும் உடற்பயிற்சி அல்லது யோகா இதில் எது உங்கள் உடலுக்கு செட் ஆகிறதோ அதை தினமும் செய்யுங்கள். நாம் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டாம் என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவ்வப்போது தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களை பதிவிட்ட ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். மேலும் எந்த சூழ்நிலையாக இருந்தாலும் தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்வதை கட்டாயமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதே கோரிக்கையாக உள்ளது.

Trending News