திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லியோ போட்ட விதை, செகண்ட் இன்னிங்ஸில் பட்டைய கிளப்பும் ஆக்சன் கிங்.. என்ன கைவசம் இத்தனை படங்களா!

Actor Arjun: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் மேற்கொள்ளும் படம் தான் லியோ. பிரம்மாண்ட படைப்பாய் பல முக்கிய பிரபலங்கள் இடம் பெற்றுள்ள இப்படத்தில் தன்னுடைய செகண்ட் இன்னிங்ஸை துவங்கியுள்ள அர்ஜுன் குறித்த தகவலை இத்தொகுப்பில் காணலாம்.

இன்று பிறந்தநாள் காணும் அர்ஜுன் சுமார் 160 படங்களுக்கு மேல் முன்னணி கதாநாயகியாக இடம் பெற்று ஆக்சன் கிங் என அழைக்கப்பட்டு வருகிறார். நடிப்பை தவிர்த்து தயாரிப்பையும் மேற்கொண்ட இவர் நடிப்பில் எண்ணற்ற படங்கள் வெற்றியை பெற்று தந்திருக்கிறது.

Also Read: 61 வயதில் பிரம்மாண்ட கோவில், பங்களா, 42 வருட அனுபவம்.. ஆக்சன் கிங்கின் மொத்த சொத்து மதிப்பு

அதிலும் குறிப்பாக ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், குருதிப்புனல், ரிதம் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது. இயக்கம், தயாரிப்பு, நடிப்பு என பல திறமைகளை கொண்ட இவர் தன் கட்டுக்கோப்பான உடல் அமைப்பால் மேற்கொண்ட நடிப்பு ஆக்சன் கிங் என்ற பெயரை பெற்று தந்தது.

அதிலும் குறிப்பாக இவர் மேற்கொண்ட போலீஸ் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அவ்வாறு இருக்க தற்போது ஹீரோ கதாபாத்திரத்தை தவிர்த்து குணசித்திர கதாபாத்திரம், வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

Also Read: ஓரளவுக்கு மேல பேச்சே இல்ல வீச்சு தான்.. சொல்லி அடித்த சூப்பர் ஸ்டார், மிரட்டும் 5-ம் நாள் வசூல்

சமீபத்தில் இவர் மேற்கொண்ட வில்லன் கதாபாத்திரம் இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக இருந்து வருகிறது. அதை தொடர்ந்து தன் அடுத்த கட்ட படங்களை மேற்கொண்டு வரும் இவர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மேதாவி, தேவர் குலம் நடுங்க, மலையாளம் படமான விருண்ணு போன்ற படங்களில் நடித்த வருகிறார். அதைத்தொடர்ந்து ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 170 படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்க போவதாகவும் கூறப்படுகிறது. அவ்வாறு தன் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பெற்று செகண்ட் இன்னிங்ஸில் பிசியாக இருந்து வருகிறார் அர்ஜுன்.

Also Read: தெரியாத்தனமாக தனுஷுக்கு ரஜினி செய்த நல்லது.. ஜெயிலரால், கேப்டன் மில்லருக்கு எகிறும் கெடுபிடி

Trending News