வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பத்திரிக்கையாளரை ஓட ஓட விரட்டிய ரஜினி.. நல்ல சம்பவம் நடக்கும் போது இப்படியா பண்றது தலைவரே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய திருமணத்தின் போது முன்னணி பத்திரிக்கையாளர்கள் இருவரை ஓட ஓட விரட்டிய சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் மணமேடையில் இருந்தே இறங்கி ஓடி அவர்களை அடிப்பதற்கு விரட்டி இருக்கிறார்.

ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்தை தில்லு முல்லு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது சந்தித்து, அவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யா, சௌந்தர்யா என்ற இரு பெண்கள் உள்ளனர். லதா ரஜினிகாந்த் 90களில் பின்னணி பாடகியாகவும் இருந்தார்.

Also Read :செய்தியை கேட்ட ரஜினி ஹேப்பி.. பேரன்களை வைத்து ஆடு புலி ஆட்டம் ஆடும் சூப்பர் ஸ்டார்

ரஜினிகாந்த் அப்போது பயங்கர பீக்கில் இருந்த சமயம் என்பதால் பத்திரிக்கையாளர்களை அழைத்து தனக்கும் , லதா என்ற பெண்ணிற்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற இருப்பதாகவும், பத்திரிக்கையாளர்கள் யாரும் வர வேண்டாம் எனவும், திருமணம் முடிந்ததும் புகைப்படங்களை பத்திரிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் கூறியிருக்கிறார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் இருந்த பத்திரிக்கையாளர் ஒருவர் அப்படி மீறி நாங்கள் வந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சூப்பர் ஸ்டார் தன்னுடைய ஸ்டைலில், நான் சொன்னதை மீறி யாராவது திருமணத்திற்கு வந்தால் உதைப்பேன் என்று கூறியுள்ளார். இது பத்திரிகையாளர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read :ரஜினி திரைக்கதை எழுதிய 2 படங்கள்.. விழுந்த பெரிய அடியால் அந்த பக்கமே போகாத சூப்பர் ஸ்டார்

சொன்னபடியே பிப்ரவரி 26 ஆம் தேதி, 1981 ஆம் ஆண்டு திருப்பதியில் நடிகர் ரஜினிகாந்த்துக்கும், லதா ரஜினிகாந்துக்கும் இயக்குனர் பாலச்சந்தர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. திருமண மேடையில் அமர்ந்திருக்கும் போதே இரண்டு முன்னணி பத்திரிக்கையாளர்களை பார்த்துவிட்டாராம். அங்கேயே அவர்களை அடிக்க துரத்தியிருக்கிறார்.

ரஜினி வளர்ந்து வரும் காலங்களிலேயே சர்ச்சைகளுக்கு பேர் போனவர். அவர் பேசும் அத்தனையுமே மீடியாக்களின் முன்னாடி சர்ச்சைகள் ஆகிவிடும். இப்போது ரஜினிகாந்த் உச்சத்தில் இருந்தாலும் அவ்வப்போது அவர் பேசும் சில விஷயங்கள் சர்ச்சைகளாக மாறிவிடுகிறது.

Also Read :ரஜினியின் நடிப்பில் திரைப்படமாக உருவான 2 நாவல்கள்.. கொடூர வில்லனாக கலக்கிய சூப்பர் ஸ்டார்

Trending News