Gossip: குழந்தை பருவத்தில் இருந்தே நடித்து வரும் அவர் இப்போது நடிகையாக மாறிவிட்டார். படங்களில் அவ்வப்போது தலை காட்டினாலும் சீரியல் ஹீரோயினாக வந்த வாய்ப்பையும் அவர் விடவில்லை.
அப்படித்தான் அவர் நடித்த முதல் சீரியல் அவருக்கு அடையாளமாக அமைந்தது. அதை அடுத்து பெரிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளுக்கு ஆளானார்.
பிறகு சோசியல் மீடியா, டான்ஸ் என கவனம் செலுத்தி வந்தார். அதே சமயம் மற்றொரு சீரியலில் ஹீரோயினாக நடிக்கவும் அவருக்கு வாய்ப்பு வந்தது.
அதற்கு சம்மதித்து ஒரு வாரம் படப்பிடிப்பும் நடந்திருக்கிறது. ஆனால் திடீரென நடிகை என்னால் சீரியலில் நடிக்க முடியாது என சொல்லி இருக்கிறார்.
கெத்து காட்ட போய் ஆப்பு வாங்கிய சில்வண்டு
ப்ரோமோ கூட வந்திருச்சு இப்ப இப்படி சொன்னா என்ன அர்த்தம். ஒரு மாசம் நடிச்சு கொடுங்க அப்புறம் வேற ஆர்டிஸ்ட் மாத்திடுறோம் என சீரியல் தரப்பிலிருந்து கேட்டிருக்கின்றனர்.
சரி சரி என சொல்லிட்டு கடைசி நேரத்தில் நடிகை சொந்த ஊருக்கு எஸ்கேப் ஆகி இருக்கிறார். இதனால் கடுப்பான சீரியல் தரப்பு விவகாரத்தை மேலிடத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது.
அதை விசாரித்து தற்போது நாலா பக்கமும் நடிகைக்கு சிவப்பு கொடி காட்டிவிட்டனர். இதைப் பார்த்த ரசிகர்கள் இவருக்கு நல்லா வேணும்.
அந்த ரியாலிட்டி நிகழ்ச்சியில் இருந்து அந்த பிரபலம் வெளியேறுவதற்கு இவர் தான் முக்கிய காரணம். சைலன்டா இருந்து அவருக்கு ஆப்பு வைத்தார்.
அந்தக் கர்மா இப்போது நடிகையை சுற்றி சுற்றி அடிக்கிறது. இப்படி ஹீரோயின்னு கெத்து காட்ட போய் ஆப்பு வாங்கி இருக்கிறார் இந்த சில்வண்டு.