Bigg Boss Tamil 8: பிக் பாஸ் 8 நிகழ்ச்சி தொடங்கி 12 வாரங்கள் முடிந்து நிலையில் இன்னும் ஒரு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் யாருக்கு பிக் பாஸ் கோப்பை கிடைக்கப் போகிறது என்ற ஒரு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. ஆனால் தற்போது வரை மக்களின் ஓட்டுக்கணிப்பின்படி அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருப்பது முத்துக்குமரன் தான்.
ஆனால் அவர் நேற்று செய்த சின்ன தவறுகளால் கொஞ்சம் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்ற நிலையில் இரண்டாவதாக இருக்கும் ராணவ் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த வாரம் கல் வைத்து கோட்டை கட்டும் டாஸ்கில் பல விஷயங்கள் குறும்படம் போட்டு காட்டும் படி போட்டியாளர்கள் பொய்க்கு மேல் பொய் அடுக்கி இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த சீசனில் இதுவரை குறும்படமே போடாத பட்சத்தில் இன்று குறும்படம் வரும் என்று ஒட்டுமொத்த மக்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி எந்த விஷயங்கள் என்றால் ஜெஃப்ரி, ராணவை தள்ளி விட்டு நான் தள்ளி விடும் பொழுது அடிப்பட்டது வேற கையில். ஆனால் அவர் வலிக்குது என்று சொன்னது மற்றொரு கையில் என ஜெஃப்ரி சொல்லிய நிலையில் ராணவ் நடிக்கிறார் என்று சில போட்டியாளர்கள் நினைத்து விட்டார்கள்.
இதற்கான குறும்படமும், அடுத்ததாக கல் கோட்டையை கட்டும்பொழுது அன்சிதாக்கு தலையில் அடியை படவில்லை. ஆனால் தீபக் அந்த கல்லை வைத்து தலையில் இடித்து விட்டார் என்று சொல்லி அங்கே ஓவராக ஆக்டிங் கொடுத்து சீன் கிரியேட் பண்ணி விட்டார் அன்சிதா. இது முழுக்க முழுக்க பொய்யான விஷயம் என்பதால் இதற்கு நிச்சயம் குறும்படம் தேவை என்று மக்கள் கமெண்ட் பண்ணி வருகிறார்கள்.
இதனைத் தொடர்ந்து ஜாக்லினை விஜய் சேதுபதி அதிகமாக டேமேஜ் பண்ணி வருவதும் அங்கே பார்க்க வந்த மக்கள் கிளாப் பண்ணாமல் ஜாக்லின் மீது தவறு இருப்பது போல் நடத்துவதும் கம்மி பண்ண வேண்டும் என்று மக்கள் அவர்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் இன்னும் வெற்றிக்கு சில வாரங்கள் மட்டுமே இருப்பதால் இனியாவது பிக் பாஸ் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இருக்க வேண்டும் என்றால் அனைவரும் உண்மையாக இருந்தால் மட்டுமே முடியும். அத்துடன் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டைவிட்டு வெளியேறப் போகும் போட்டியாளர் ரஞ்சித் தான்.