வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

Gossip : சில்வண்டுனு நனச்சா சிக்க வச்சுட்டே.. மாஸ் ஹீரோவின் மார்க்கெட்டை சுக்குநூறாகிய பாடகி

பாடகி சமீபத்தில் கோலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தும் நிலையில் இதில் பெரிய ஹீரோவின் பெயரும் அடிபட்டு இருக்கிறது. ஏற்கனவே பல வருடங்களுக்கு முன்பு நடிகர், நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பலர் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த விஷயம் பூதாகரமாக வெடித்த நிலையில் பல மாதங்களுக்குப் பின் பாடகிக்கு மனநிலை சரியில்லை என்று ஒரு செய்தி வெளியாகி இருந்தது. இதனால் அவர் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து இதுபோன்ற தவறான வீடியோக்களை வெளியிட்டு வருவதாக குற்றம் சுமத்தி இருந்தனர்.

பல வருடம் கழித்து மீண்டும் ஃபாமுக்கு வந்த பாடகி அப்போது சிக்காத சில நடிகர், நடிகைகளை பற்றியும் இப்போது வெளிப்படையாக பேட்டி கொடுத்திருக்கிறார். தன் எக்ஸ் புருஷன் உட்பட பலரையும் கோர்த்து விட்டிருக்கும் அந்த பாடகி லிஸ்டில் மாஸ் ஹீரோ ஒருவர் இருக்கிறார்.

அந்த ஹீரோ பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக்கானவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் உடம்புக்கு உபாதை ஏற்படுத்தும் ஒரு பொருளை பயன்படுத்துவதாகவும், இதை பலருக்கும் கொடுப்பதாகவும் கூறி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார்.

‌இது உண்மையா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்க தொடங்க உள்ளனர். சிலுவண்டுனு நினைச்சா சிக்க வச்சுட்டு என பாடகி இடம் சிக்கிய பலர் இப்போது பதட்டத்தில் இருக்கின்றனர். மேலும் மாஸ் நடிகர் இந்த விவகாரத்தில் சிக்கி இருக்கிறார் என்று தெரிந்தால் இத்தனை வருடம் சேர்த்து வைத்த மொத்த பேரும் நாசமாகிவிடும்.

Trending News