வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஜானகி ஃபில்ட் அவுட்டாக காரணமாக இருந்த பாடகி.. பாலச்சந்தரால் மறுக்கப்பட்ட வாய்ப்புகள்

தமிழ் திரையுலகில் ஜானகியின் திறமையை முழுவதும் பயன்படுத்திக் கொண்டவர் இளையராஜா தான். இவருடைய சரியான உச்சரிப்பு மற்றும் குரல் வலம் ரசிகர்கள் மத்தியில் தேனிசையாக கேட்டு கொண்டாடினார்கள். 80 களில் பல பாடல்கள் ஜானகி குரலில் வெளியானது.

தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் கிட்டத்தட்ட 1000 கணக்கான பாடல்களை ஜானகி பாடியுள்ளார். மேலும் இயக்குனர் இமயம் பாலச்சந்தர் படங்களில் அதிக எண்ணிக்கையில் பாடியவர் ஜானகி தான். இவ்வாறு பாலச்சந்தர் தனது படங்களில் வாய்ப்பை அள்ளித் தந்துள்ளார்.

Also Read : என்னால் பிறரையும் கொல்லாதீர்கள்: பாடகி ஜானகி

ஆனால் அதன் பிறகு வந்த குயில் பாட்டு சித்ரா தமிழ் சினிமாவில் கோலோச்சிய பின்பு ஜானகிக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அனைத்து ரசிகர்களும் சித்ராவின் மெல்லிசையான குரலில் தான் மயங்கி கிடந்தார்கள். அப்போது பாலச்சந்தர் படங்களுக்கு தேனிசைத் தென்றல் தேவா, ஏ ஆர் ரகுமான், மரகதமணி ஆகியோர் தான் இசையமைத்து வந்தார்கள்.

இந்த மூன்று இசையமைப்பாளர்கள் படங்களில் அதிக அளவு சித்ராவுக்கு தான் வாய்ப்பு கொடுத்தனர். இதனால் ஒரு காலகட்டத்தில் பாலச்சந்தரின் எல்லா படங்களிலும் பாடி வந்த ஜானகிக்கு அவர் படத்திலேயே வாய்ப்பு மறுக்கப்பட்டது.

Also Read : பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ

ஆகையால் ஒரு கட்டத்திற்கு மேல் ஜானகி பீல்ட் அவுட்டாகும் நிலைக்கு தள்ளப்பட்டார். ஏனென்றால் ஏ ஆர் ரகுமான் போன்ற இசையமைப்பாளர்களின் இசையில் சித்ராவின் குரல் தான் எடஎடுபட்டது. மேலும் பல இசையமைப்பாளர்களும் ஜானகி அம்மாவுக்கு வாய்ப்பு தர மறுத்தனர்.

அப்போது சித்ரா மற்றும் எஸ் பி பி குரலில் வெளியான டூயட் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதன் பின்பு சில பாடல்களைப் பாடி வந்த ஜானகி 2018 இல் இனிமேல் பாட போவதில்லை என்று அறிவித்தார். இவர் கடைசியாக மலையாள சினிமாவில் 2016 இல் ஒரு தாலாட்டு பாடல் பாடியிருந்தார்.

Also Read : பாலச்சந்தரின் மற்றுமொரு படைப்பு.. ரீஎன்ட்ரியில் வில்லனாய் கலக்கும் இதயம் முரளியின் நண்பர்

Trending News