Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

தட்டு தடுமாறும் விஜய்யின் வாரிசு.. எடுத்த உடனே இயக்குனர் இமயமா ஆகிட முடியுமா?

தட்டு தடுமாறும் விஜய்யின் வாரிசு.. எடுத்த உடனே இயக்குனர் இமயமா ஆகிட முடியுமா?

முதல் படத்திலேயே திணறும் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்.

Vijay – Jason Sanjay : விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இப்போது லைக்கா உடன் கைகோர்த்து புதிய படத்தை எடுக்க இருக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்ற ஒரு தகவலும் வெளியாகி இருந்தது. மேலும் இந்த படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் மகனால் இப்போது இந்த படம் ஆரம்பிப்பது தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது. அதாவது சஞ்சய் கனடாவில் டோரொண்டோ பிலிமில் பள்ளி படிப்பை முடித்தார். அதன் பிறகு இங்கிலாந்தில் சினிமா சார்ந்த படிப்பை படித்து முடித்திருக்கிறார். மேலும் ஒரு குறும்படமும் சஞ்சய் எடுத்திருக்கிறார்.

இந்த சூழலில் சஞ்சய்க்கு தமிழ் பேச மட்டும் தான் தெரியுமாம். எனவே படிக்கவோ, எழுதவோ தெரியாத காரணத்தினால் தட்டு தடுமாறிக் கொண்டிருக்கிறாராம். மேலும் தன்னுடைய கதையை சஞ்சய் ஆங்கிலத்தில் எழுதி வரும் நிலையில் அதை ஒருவர் மொழி பெயர்த்து வருகிறாராம்.

முதல் படத்தில் சஞ்சய் இவ்வாறு தட்டு தடுமாறினாலும் டைரக்ஷனில் பின்னி பெடல் எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு மட்டுமல்லாமல் முதல் படத்திலேயே இயக்குனர் இமயம் ஆகிவிட முடியுமா? ஒவ்வொரு படியாக கற்றுக்கொண்டதான் மிகப்பெரிய உயரத்தை அடைய முடியும்.

விஜய்யின் செல்வாக்கு இல்லாமல் தனித்துவமாக சாதித்து காட்ட வேண்டும் என சஞ்சய் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சஞ்சய்-க்கு தமிழ் தெரியாது என்ற விஷயம் இப்போது வெளியானவுடன் தமிழன் விஜய்யின் மகனுக்கு தமிழ் தெரியவில்லையா என்ற விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.