திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாத்தி கம்மிங் விட அட்டகாசமாக ரெடி ஆகிய லியோ பாடல்.. விஜய், அனிருத்துடன் இணைந்த கோளாறான பிரபலம்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் சூப்பர் ஹிட் படமானது. அதிலும் அந்த படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் வித்தியாசமாகவும் அனைவரும் முணுமுணுக்க வைத்த பாடல் ஆகவும் அமைந்தது. முக்கியமாக வாத்தி கம்மிங் பாடல் பட்டித்தொட்டி எல்லா பக்கமும் பறந்து கிட்டத்தட்ட 4 மில்லியன் அளவிற்கு போய் அட்டகாசத்தை ஏற்படுத்தியது.

அதனால் தற்போது அதே கூட்டணியில் உருவாக்கிக் கொண்டிருக்கும் லியோ படமும் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. அதே அளவுக்கு பாடலையும் அல்டிமேட் ஆக கொடுக்க வேண்டும் முயற்சி செய்து இருக்கிறார்கள்.

Also read: த்ரிஷாவுக்கு போட்டியாக களம் இறங்கும் 90ஸ் ஹீரோயின்.. 20 வருடத்திற்கு பிறகு விஜய்யுடன் ஜோடி போடும் நடிகை

அதற்காக லியோ படத்தில் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆவதற்கு மும்மரமாக வேலை பார்த்து வருகிறார்கள். ஆனாலும் அதில் வரும் பாடல்கள் நாலா பக்கமும் பரவ வேண்டும் என்பதற்காக ஒரு பாடலை விஜய், அனிருத் மற்றும் அசல் கோளாறு இவர்கள் அனைவரும் சேர்ந்து பாடலை பாடியிருக்கிறார்கள்.

ஏற்கனவே அசல் கோளாறு பாடிய ஜொர்தாலயே உர்ட்டாதே பாடல் அனைவருக்கும் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால் தற்போது இவர்கள் மூன்று பேரும் சேரும் கூட்டணி இது அனைத்தையும் ஓவர் டேக் செய்யும் அளவிற்கு மிக பிரம்மாண்டமாக ரெடியாகி கொண்டிருக்கிறது.

Also read: புருஷனை அறிமுகப்படுத்தாமல் கர்ப்பிணியான விஜய் பட நடிகை.. பிடிச்சாலும் புளியம் கொம்பு

ஏற்கனவே ஒரு பக்கம் இப்படத்தின் கதை எந்த அளவுக்கு இருக்கும் என்று அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைவிட இன்னும் இந்தப் பாடல்கள் மூலம் அனைவரையும் கிரங்கடிக்க வைக்க வேண்டும் என்று வேலை நடைபெற்று வருகிறது. ஆக மொத்தத்தில் லியோ படம் செம ட்ரீட்டாக இருக்கப் போகிறது.

அத்துடன் இப்பாடலுக்கு 2000 டான்ஸ் மாஸ்டர்களை நடனம் ஆட வைக்கிறார்கள். இந்த ஒரு பாடலுக்கே அதிக அளவில் செலவு செய்து பிரம்மாண்டமாக எடுக்கிறார்கள். இப்படி லியோ படத்தின் ஒவ்வொரு அப்டேட்டுகளும் கேட்க கேட்க எப்போதுதான் அக்டோபர் 19ஆம் தேதி வரும் என்ற ஆவலை தூண்டுகிறது.

Also read: எல்லாத்துக்கும் கட்டையை போடும் விஜய்.. லியோ பட விஷயத்தில் வெறுத்துப் போன லோகேஷ்

Trending News