Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

அஜித் நற்குணத்தை பார்த்து அப்பா போல் அரவணைத்த நடிகர்.. அவருமே யூஸ் பண்ணிக்க நினைத்ததால் தூக்கி எறிந்த AK

அஜித் நற்குணத்தை பார்த்து அப்பா போல் அரவணைத்த நடிகர்.. அவருமே யூஸ் பண்ணிக்க நினைத்ததால் தூக்கி எறிந்த AK

அஜித்திடம் நெருங்கி பழகிய நடிகர் கால்ஷீட் கேட்டதால் ஏற்பட்ட பிரிவு

The split was caused by an actor who was close to Ajith asking for a call sheet: தமிழ் திரையுலகில் யாருமே கணிக்க முடியாத அளவு அஜித் சிறப்பான மனிதராவார். அவருடன் நெருங்கி பழகியவர்கள் மட்டுமே உணரக்கூடிய உன்னதமான கேரக்டரை கொண்டுள்ள அஜித், தொழில் நட்பு இரண்டையும் ஒன்றாக கலக்க விடுவதில்லை! அப்படி கலக்கும் போது, அதை கழட்டி விட தவறுவதில்லை! இதற்கு உதாரணமே இந்நிகழ்வு,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் அவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் படங்கள் நேர்மறையான விமர்சனத்தை பெறுவதோடு வசூலிலும் தன்னிறைவை அடைகின்றன. முன்னணி இயக்க இயக்குனர்களுடன் கைகோர்த்து பொழுதுபோக்காகவும், அதே சமயம் சமூக கருத்துடன் உள்ள கதைகளாக பார்த்து நடித்து வருகிறார் அஜித்.

கடந்த ஆண்டு வெளியான துணிவின் வெற்றிக்கு பின் மகிழ் திருமேனியின் இயக்கத்தில்  கமிட்டான தல அஜித் தற்போது விடாமுயற்சி ஷூட்டிங்கில் பிஸியாக உள்ளார். கோடை விடுமுறையை கருத்தில் கொண்டு மற்றும் அஜித் பிறந்தநாளை ஒட்டி விடாமுயற்சி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித் அவர்கள் தன் இயல்பான சுபாவத்தை விடுத்து வெளிஆட்கள் யாரிடமும் நெருங்கி பழகாத தன்மையை கொண்டு உள்ளார்.   விழாக்கள், அரசியல் நிகழ்வுகள் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை அறவே தவிர்த்து வருகிறார் அஜித்.

முன்னணி நடிகராக இருப்பதனாலேயே இப்படி கெத்து காட்டுகிறார் என்று அறியாதவர்கள் கூற, தனக்கு நடந்த கசப்பான அனுபவங்களாலேயே பொது இடங்களில் இருந்து தன்னை விலக்கி வைத்துள்ளார் அஜித். கிரீடம் படத்தில் இவருக்கு அப்பாவாக நடித்தவர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ராஜ்கிரண். அஜித் நற்குணத்தை பார்த்து அப்பா போல் அரவணைத்த நடிகர் ராஜ்கிரண். அவரின் குணத்தை அறிந்து மிகவும் இயல்பாகவும் நெருக்கமாகவும் பழகியுள்ளாராம் அஜித்.

இந்த பழக்கம் அவர் வீட்டுக்கு சென்று அரட்டை அடிப்பது வரை தொடர்ந்து இருந்தது. ஷூட்டிங்கில் இருந்தால் கூட பல மணி நேரம் வெயிட் பண்ணி இருவரும் சேர்ந்து பேசி இருந்திருக்கிறார்கள். திடீரென்று ஒருநாள் படம் எடுத்ததால் நஷ்டமாகிவிட்டேன் உனது கால்ஷீட் கொடுத்தால் நல்லா இருக்கும் என்று ராஜ்கிரண் அஜித்திடம் அப்ளிகேஷன் போட, தொழில் வேறு! பழக்கம் வேறு! என நைசாக நழுவி கழண்டு விட்டாராம் அஜித்.

A

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.