வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

விவாகரத்தின் ஆரம்பப்புள்ளி.. ரஜினி பட ஆசையால் தனுஷ்க்கு வந்த விபரீத வினை

சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் அதிக பேசு பொருளானது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவகாரத்து செய்திதான். இவர்களை இணைக்கும் முயற்சியில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என பலரும் செயல்பட்டு வந்தனர். ஆனால் தனுஷ், ஐஸ்வர்யா இருவருமே பிரிய போவதில் மிக உறுதியாக இருந்தனர்.

இதனால் இவர்களது விவாகரத்திற்கு பின்னணியில் என்ன காரணம் என சமூக வலைதளங்களில் பல செய்திகள் உலாவியது. மேலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரைப் பற்றியும் பல கிசுகிசுக்கள் வெளியாகி இதுதான் காரணங்கள் என ஊடகங்கள் கூறி வந்தனர்.

இந்த பிரச்சனையால் தற்போது தனுஷிற்கு படவாய்ப்புகளும் குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்திற்கு ஆரம்ப புள்ளியாக இருந்த விஷயம் தற்போது வெளியாகியுள்ளது. தனுஷ் ஆரம்பத்தில் தான் நடிக்கும் படங்களில் தனது மாமனார் ரஜினிகாந்த் நடித்த பழைய படங்களின் பெயரை வைத்திருப்பார்.

அந்த படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறும். இந்நிலையில் ரஜினி படத்தில் நடிக்கும் ஆசையும் தனுஷுக்கு வந்துள்ளது. பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் காலா. இப்படத்தில் ரஜினி வயதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இவரது பிளாஷ்பேக் காட்சிகளில் இளமை கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் பெரிதும் ஆசைபட்டுள்ளார். இதை தனது மனைவி ஐஸ்வர்யாவை வைத்து ரஜினியிடம் பேச சிபாரிசு செய்துள்ளார் தனுஷ். ஆனால் அதெல்லாம் வேண்டாம், படம் நன்றாக வராது என முட்டுக்கட்டை போட்டுயுள்ளார் ரஜினி.

இதனால் தனுஷின் அந்த ஆசை நிறைவேறாததால் ஐஸ்வர்யா, தனுஷ் இடையே அடிக்கடி பிரச்சினை வந்துள்ளது. மேலும் அங்கேதான் முதலில் ஆரம்பித்துள்ளது இவர்களது சண்டை. அது போகப் போக பெரிதாகி பூதாகரமாக வெடித்து விவாகரத்து வரை கொண்டு சென்றுள்ளது.

Trending News