புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கதை மட்டும் தான் ஹீரோ என்பதை மீண்டும் நிரூபித்த ஒரே படம்..2 இடத்தில் ஆஸ்கார் வெல்லப் போவது உறுதி

2022 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் வெளியான முன்னனி நடிகர்களின் திரைப்படங்கள் தோல்வி அடைந்தாலும் சில சிறு பட்ஜெட் படங்கள் யாரும் எதிர்ப்பார்க்காத அளவில் வெற்றி பெற்று ரசிகர்களை கவர்ந்தது. அதேபோல பான் இந்தியா படங்களும் தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்தது. அந்த வகையில் தெலுங்கு,கன்னட படங்கள் யாரும் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் வெற்றியை கொடுத்தது,

உதாரணமாக கடந்தாண்டு மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான கனடா நடிகர் யாஷின் கே.ஜி.எப் 2 படம் 1000 கோடி வரை உலகமெங்கும் வசூலை அள்ளி குவித்தது. அதே போல இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படமும் 1000 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது. ஹிந்தியில் இயக்குனர் விவேக் அக்னிஹோத்ரி இயக்கத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் இந்திய சினிமாவையே உலுக்கியது.

Also Read: 2022ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கார் நாயகனையே பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கன்னுக்குட்டி

இதனிடையே கடந்தாண்டு வெளியான இந்திய படம் ஒன்று 2023 ஆம் வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெற்றுள்ளது. உலக சினிமாவின் உயரிய விருதான 95 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருது தேர்வில், மொத்தம் 101 திரைப்படங்கள் உலகளவில் தகுதி பெற்றுள்ளது. அதில் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ஒரே ஒரு படம் மட்டும் ஆஸ்கார் போட்டியில் மோத உள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் பேன் இந்திய திரைப்படமாக வெளியான கன்னட திரைப்படம் காந்தாரா வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் சக்கை போடு போட்டது. வெறும் 16 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக் குவித்தது. பழங்கால மக்களின் வாழ்க்கையையும் அவர்கள் வணங்கும் தெய்வத்தையும் தத்ரூபமாக ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருப்பார்.

Also Read: IMDB வெளியிட்ட 2022 சிறந்த டாப் 10 படங்கள்.. இந்தியளவில் டஃப் கொடுத்த காந்தாரா

பழங்குடியின மக்களுக்கு தெய்வத்தின் உத்தரவால் மன்னனால் வழங்கப்பட்ட காட்டினை, அபகரிக்க நினைக்கும் மன்னன் வம்சத்தை அந்த தெய்வம் எப்படி பழி வாங்கி அம்மக்களை பாதுகாக்கிறது என்பதே இப்படத்தின் கதை. இப்படத்தில் ஆரம்பத்தில் காட்டப்படும் வராக ரூபம் பாடல் காட்சி பலருக்கும் புல்லரிக்கும் விதமாக அமைந்திருக்கும். இதனிடையே இப்படம் ஆஸ்கார் வரை சென்று தகுதிப் பெற்றுள்ளது.

சிறந்த படத்திற்காகவும், சிறந்த நடிகருக்காகவும் இப்படம் தேர்வாகியுள்ளது. இந்த சந்தோசத்தை கொண்டாடும் வகையில் காந்தார படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஹும்பலே பிலிம்ஸ் ட்விட்டரில் சந்தோசத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்விட் செய்துள்ளது.மேலும் இப்படத்தின் நாயகர் மற்றும் இயக்குனர் ரிஷப் ஷெட்டியும் நன்றிகளை கூறி தனது அபரிமிதமான சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Also Read: காந்தாரா பட ரிஷப் ஷெட்டியின் கூட்டணியில் இணையும் விக்ரம் பட ஏஜென்ட்.. அனல் பறக்கும் அடுத்த பட அப்டேட

Trending News