வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யானைக்கு நிகழ்ந்த அநியாயத்தின் கதை.. படம் மூலமாக மனிதருக்கு கொடுக்கும் சவுக்கடி

கடந்த வருடம் வெளிவந்த தி எலிஃபென்ட் விஸ்பரர்ஸ் குறும்படம் ஆஸ்கர் விருதை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்தது. இப்படம் விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையேயான பிணைப்பால் இதயத்தை தொடும் கதையுடன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாரம்பரியத்தையும் சுட்டிக்காட்டும் விதமாக அமைந்திருக்கும். அதே மாதிரி தற்போது யானைக்கு நிகழ்ந்த அநியாயத்தின் கதையாக ஒரு படம் வெளிவர இருக்கிறது.

அதாவது கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மலை கிராமங்களில் அங்குள்ள மக்களை அச்சுறுத்தும் விதமாக முரட்டு யானையாக அரிக்கொம்பன், விளைநிலங்களில் புகுந்து கடும் சேதத்தை விளைவித்தது. அத்துடன் வீடுகள் மற்றும் ரேஷன் கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி 20 பேரைக் கொன்றது. அதனால் இந்த யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டு காட்டுக்குள் விடப்பட்டிருக்கிறது.

Also read: கஸ்டடி படத்தால் அசிங்கப்படும் வெங்கட் பிரபு.. மூன்று நாள் வசூலில் முடிவானது படத்தின் தோல்வி.!

அதனாலயே கேரளாவின் மலைவாழ் மக்களுக்கு அரிக்கொம்பன் என்ற பெயரை கேட்டாலே குலை நடுங்கும். அந்த அளவிற்கு கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த யானை அவர்களை அச்சுறுத்திருக்கிறது. இதனை அடுத்து தற்போது தமிழகத்தின் மேகமலை மற்றும் அதனுடைய சுற்று வட்டாரத்தில் அரிக்கொம்பனின் நடமாட்டம் காணப்படுவதால் அங்கு இருக்கும் மக்களை எச்சரிக்கும் படியாக தேனி மாவட்ட வன அலுவலர் சமீபத்தில் அறிக்கை விட்டிருந்தார்.

ஆனால் இரு தினங்களுக்கு முன்பு இந்த யானை ஸ்ரீவில்லிபுத்தூர் காட்டுப்பகுதியை நோக்கி நகர்ந்ததாக பார்த்தவர்கள் கூறியிருக்கிறார்கள். இதனால் வன அலுவலர் இதை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். அடுத்ததாக இந்த யானையின் கதையே மையமாக வைத்து அரிக்கொம்பன் என்ற பெயரில் மலையாளத்தில் ஒரு படம் உருவாகிறது. இப்படத்தை சஜித் யாகியா இயக்குகிறார்.

Also read: அம்மாக்களை கொண்டாட வைத்த 6 படங்கள்.. 3 குழந்தைகளுடன் புது அவதாரம் எடுத்த சிம்ரன்

இந்த திரைப்படத்தின் முக்கிய நோக்கமே அரிக்கொம்பனுக்கான நீதியே பேசும் படமாக இருக்கும். அதாவது இந்த யானையின் வாழ்விடங்களை அழித்தோம், இதன் பாதையை மறித்தோம். இந்த பூமியில் இருக்கும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழும் உரிமை இருக்கிறது. ஆனால் அந்த உயிரினங்களுக்கு மனிதன் செய்யும் துரோகங்களை பற்றிய கதையாக எடுக்கப்பட்டு அவர்களுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக உருவாக்க இருக்கிறது.

இப்படம் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்க இருக்கிறது. இப்படத்திற்கான படப்பிடிப்பு இலங்கையில் உள்ள சிகிரியா காட்டுப்பகுதியிலும், இடுக்கி மாவட்ட மலைப்பகுதியில் படமாக எடுக்க வேலைகள் தொடங்கியுள்ளன. இப்படம் அரிக்கொம்பன் என்ற தலைப்பில் தரமான படமாக வெளிவரும். அத்துடன் இதன் மூலம் மனிதருக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக இக்கதை அமையும் என்று கூறியிருக்கிறார்கள்.

Also read: நடிகர்களுக்கு லவ் ஃபெயிலியர் ஆன 5 படங்கள்.. விஜய் கிளைமாக்ஸ் இல் நொறுங்கிப் போன அந்த படம்

Trending News