புதன்கிழமை, நவம்பர் 6, 2024

ரெட் கார்ட் கொடுக்கப்பட்ட தளபதி.. இன்று பாக்ஸ் ஆபீஸ் கிங்

தளபதி விஜயின் சமீபத்திய படங்களின் வசூல்கள் 150 கோடிக்கு குறைவாக இல்லை. அவருடைய ரீசன்ட் ரிலீசான பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் 267 கோடி வசூல் செய்தது. அட்லீயின் இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தின் வசூல் கிட்டத்தட்ட 295.28 கோடி ஆகும்.

இப்போது கோலிவுட் பாக்ஸ் ஆபிசின் கிங் என்று தளபதி ஆகிவிட்டார். ஆனால் இந்த வெற்றி அவருக்கு எளிதாக கிடைத்து விடவில்லை. இயக்குனரின் மகனாக கோலிவுட்க்கு வந்த தளபதி அவருக்கான பாதையை தேர்ந்தெடுத்து சிறப்பாக நடித்து ‘இளைய தளபதி’ ஆனார். ஆனால் விஜய்க்கு கடந்த 10 வருடங்கள் ஒரு போராட்ட களமாகவே இருந்தது.

Also Read: நீங்க அப்படி செஞ்சா, நாங்க இப்படி செய்வோம்.. விஜய்க்கு போட்டியாக விஜய் டிவி பிரபலங்கள் செய்த காரியம்

போக்கிரி பட வெற்றிக்கு பிறகு, விஜய்க்கு அடுத்தடுத்து பெரிய சறுக்கல்கள் தான். விஜயின் 50 வது படமான சுறா அவருக்கு மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. கில்லி பட கூட்டணியில் அமைந்த குருவி, போக்கிரி பட கூட்டணியில் அமைந்த வில்லு தளபதிக்கு அட்டர் பிளாப்பான படங்கள்.

சில அரசியல் காரணமாக AL விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைப்படம் திரையில் வருவதற்கே அந்த படக்குழு அவ்வளவு போராடியது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக விஜய் நடித்த காவலன் திரைப்படத்திற்கு தியேட்டர் கிடைக்கவில்லை. அப்போது நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட விஜய் கடைசி ரோவில் உட்காரவைக்கப்பட்டு அவமானபடுத்தப்பட்டார் என்று ஒரு வீடியோ கூட இன்னும் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.

Also Read: அல்லோலப்படும் வாரிசு படக்குழு.. ஜெயிலர் படத்திற்கு நெல்சன் போட்ட கண்டிஷன்

ஒரு கட்டத்தில் தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் கூட்டம் ஒன்றாக சேர்ந்து நடிகர் விஜய்க்கு ரெட் கார்ட் கொடுக்க முடிவு செய்தனர். அவர்கள் விஜயின் ஒரு சில படங்களை உதாரணம் காட்டி அந்த படங்கள் படு தோல்வி என்றும், தயாரிப்பாளர்கள் தப்பான கணக்குகளை காட்டுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினர். புலி படத்தின் போதெல்லாம் விஜயை ட்ரோல் செய்யாத சமூக வலைத்தளங்கள் இல்லை.

இவ்வளவு பிரச்சனைகளுக்கு பிறகு தளபதி விழுந்த இடத்திலிருந்தே எழுந்து வெற்றிக்கொடி நாடினார். இப்போது விஜயை நம்பி கோடிக்கணக்கில் தயாரிப்பாளர்கள் பணம் போடுகின்றனர். கோடிக்கணக்கில் பணம் கொடுத்து விநியோகஸ்தர்கள் வாங்குகின்றனர். ஏன் தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை கொண்டு வரும் இடத்தில் அவர் இருக்கிறார்.

Also Read: கோப்ரா பட தோல்வியை அன்றே கணித்த விஜய்.. பாம்பு ரொம்ப நேரம் படம் எடுத்தா கீறி கிட்ட தோத்து போகும்

- Advertisement -spot_img

Trending News