புதன்கிழமை, ஜனவரி 15, 2025

Sundar C: அந்த 3 படத்தோட காபி தான் வின்னர் படத்தின் சக்சஸ்.. எல்லை மீறிய பிரசாந்த் ரகசியத்தை உடைத்த சுந்தர் சி

Sundar C: சுந்தர் சி இயக்கும் படங்கள் பொருத்தவரை காமெடிக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு மக்களை என்டர்டைமென்ட் பண்ணும் வகையில் இருக்கும். அத்துடன் தயாரிப்பாளர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு படங்களை தரமாக எடுக்கக் கூடியவர். அப்படிப்பட்ட இவரால் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க முடியவில்லை. இதனால் பேய் கதைகளை மட்டும் கடந்த நான்கு பாகங்களாக உருட்டிக் கொண்டு வருகிறார்.

இதற்கு இடையில் எத்தனையோ நடிகர்களுக்கு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். முக்கியமாக பிரசாந்துக்கு வின்னர் படத்தை கொடுத்து இப்பொழுது வரை வாய்விட்டு வயிறு குலுங்க சிரிக்கும் அளவிற்கு நகைச்சுவையை பின்னி பெடலெடுத்து இருப்பார். வடிவேலுவின் கைப்புள்ள கேரக்டர் மறக்கவே முடியாது.

மைண்ட் வாய்ஸ்ல எல்லா உண்மையும் உளறிய சுந்தர் சி

ஆனால் அப்படிப்பட்ட இப்படத்தை தெலுங்கு படத்தை காப்பி அடித்து தான் வின்னர் படத்தை எடுத்ததாக சமீபத்தில் சுந்தர் சி அளித்த பேட்டியில் கூறுகிறார். அதாவது ஏற்கனவே சுந்தர் சி எடுத்த சில படங்களை அப்படியே தெலுங்கு பக்கத்தில் காப்பி அடித்து ஹிட் படத்தை கொடுத்திருக்கிறார்கள்.

இதை பார்த்து கடுப்பான சுந்தர் சி அக்கட தேசத்தை பழிவாங்குவதற்காக கிட்டத்தட்ட பத்து படங்களை பார்த்து அதிலிருந்து ஒவ்வொரு காட்சிகளாக சுட்டு இருக்கிறார். கடைசியில் தெலுங்கில் டாப் ஹீரோக்கள் நடித்து வெற்றி பெற்ற மூன்று படங்களின் கதையை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஒரு படமாக உருவாக்கினது தான் வின்னர் படம் என்று கூறி இருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து அப்படத்தின் அனுபவத்தை ஷேர் பண்ணும் பொழுது கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு கிளாமர் வேண்டும் என்பதினால் பிரசாந்தை சட்டை பட்டனை கழட்டி விட்டு கிளாமர் லுக்குக்கு கொண்டு வந்து ஹீரோயினுடன் நெருக்கம் காட்டி நடிக்க வைத்ததாக கூறியிருக்கிறார்.

அந்த நேரத்தில் பிரசாந்துக்கும் வேற வழி இல்லாமல் சுந்தர் சி சொன்னபடி எல்லை மீறி சில காட்சிகளில் நடித்ததாக உண்மையை போட்டு உடைத்திருக்கிறார். மேலும் இன்னொரு விஷயத்தையும் பகிர்ந்து இருக்கிறார். அதாவது ஹீரோவை கீழ விழ வைக்க வேண்டும் என்று ஹீரோயின் ஒரு மேட்டில் வாழைப்பழத் தோலை போட்டு ஹீரோ வேகமாக வரும் பொழுது அதில் வழுகி விழுவது போல் தெலுங்கு படத்தில் காட்டப்பட்டிருக்கிறது.

அதை பார்த்த சுந்தர் சி இதே காட்சியை வின்னர் படத்திலும் கொண்டு வரலாம் என்று நினைத்து இருக்கிறார். ஆனால் அப்படியே எடுத்தால் ஈ அடித்தான் காப்பி போல் ஆகிவிடும் என்பதால் ஹீரோவுக்கு பதிலாக வடிவேலு வந்துட்டேன் என்று சொல்லி வழுகி விழுவது போல் வாழைப்பழ தோலுக்கு பதிலாக கோலி குண்டை போட்டு கொஞ்சம் சீனை மாற்றி எடுத்ததாக கூறி இருக்கிறார்.

இப்படி ஏகப்பட்ட தில்லாலங்கடி வேலையை பார்த்து எடுத்த படம் தான் வின்னர். ஆனால் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து தற்போது வரை மறக்க முடியாத படமாக அமைந்துவிட்டது என்று சுந்தர் சி பேட்டியில் கூறியிருக்கிறார்.

Trending News