திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அவ இல்லனா செத்துடுவன், நடிகையின் மயக்கத்திலிருந்த வாரிசு நடிகர்.. திட்டம் போட்டு வெட்டி விட்ட அப்பா

சினிமா நடிகர்கள் சக நடிகைகளை காதலிப்பது திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. இப்படி நாம் ஏகப்பட்ட நட்சத்திர ஜோடிகளை பார்த்திருக்கிறோம். அதில் சிலர் திருமண வாழ்க்கையில் செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் பலர் சில காரணங்களால் பிரிந்து விடுகின்றனர். அப்படி ஒரு காதல் தோல்வி தான் பிரபல நடிகர் ஒருவருக்கு நடந்திருக்கிறது.

வாரிசு நடிகராக சினிமாவுக்கு அறிமுகமான அந்த நடிகர் குறுகிய காலத்திலேயே மக்கள் மனதை வென்றார். முதல் படமே அவருக்கு மிகப்பெரும் வரவேற்பை கொடுத்த நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களும் அவரை முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு கொண்டு சென்றது.

Also read: டாப் நடிகரின் கிடு கிடு சினிமா வளர்ச்சி.. நிஜ சொர்ணாக்காவாக ஆட்டிப்படைத்த மனைவி

இப்படி பிசியாக நடித்துக் கொண்டிருந்த நடிகர் உயரமான அந்த பப்ளி நடிகையுடன் ஒரு திரைப்படத்தில் இணைந்து நடித்தார். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த அந்த ஜோடி அடுத்தடுத்த திரைப்படங்களிலும் ஜோடி போட ஆரம்பித்தார்கள். இதனால் அவர்களுக்குள் இருந்த நட்பும் அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறது.

அதாவது அந்த நடிகர் நடிகையின் அழகில் மயங்கி சதா சர்வ காலமும் அவருடனே இருந்திருக்கிறார். மணி கணக்கில் காதல் வசனம் பேசுவது, யாருக்கும் தெரியாமல் டேட்டிங் என்று அவர்கள் இருவரும் தங்கள் காதலை வளர்த்து வந்திருக்கின்றனர். இது ஒரு கட்டத்தில் மீடியாவிலும் கிசுகிசுவாக வெளிவந்தது.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு மறுத்ததால் குரூரமாக பழி வாங்கிய இயக்குனர்.. அவமானத்தால் கூனி குறுகி போன நடிகை

அதுவரை அமைதியாக இருந்த நடிகரின் அப்பா இது போன்ற செய்திகளுக்கு பிறகு அதிரடி காட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது அவர் தன் மகனை அழைத்து இது போன்ற வேலை எல்லாம் வேண்டாம் என்று அறிவுரை கூறியிருக்கிறார். ஆனாலும் கேட்காத வாரிசு நடிகர் அவ இல்லன்னா செத்துடுவேன் என்ற ரேஞ்சுக்கு வசனம் பேசி இருக்கிறார்.

இருப்பினும் தன் அப்பாவை மீறி அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் வேறு வழியில்லாத அந்த நடிகர் தன் காதலிக்கு குட்பை சொல்லிவிட்டு அப்பா கைகாட்டிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். நடிகரை நம்பி மோசம் போன அந்த நடிகை தான் பாவம் இப்போது திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட் செய்ய மறுத்ததால் பலான கேசில் மாட்டிய நடிகை.. ஹீரோயின் மார்க்கெட்டை காலி செய்த நடிகர்

Trending News