செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ட்ரைலரிலேயே மண்ணை கவ்விய வாரிசு.. மீசையை முறுக்கி வரும் அஜித்

இன்னும் சில நாட்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித், விஜய்யின் படங்கள் திரையரங்குகளில் சரவெடியாக வெடிக்க காத்துக்கொண்டிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு விஜயின் ஜில்லா, அஜித்தின் வீரம் உள்ளிட்ட படங்கள் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின்னர் விஜயின் வாரிசு, அஜித்தின் துணிவு படங்கள் ஒன்றாக ஜனவரி 11 ஆம் தேதி ரிலீசாகி மோதவுள்ளது.

இதனிடையே துணிவு படத்தின் ட்ரைலர் வாரிசு பட ட்ரைலருக்கு முன்பாகவே கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி வெளியானது. இணையத்தில் வெளியான 24 மணி நேரத்தில் 25 மில்லியன் பார்வையாளர்களையும், 1.1 மில்லியன் லைக்ஸ்களையும் அள்ளி குவித்தது. ட்ரைலரின் தொடக்கத்திலிருந்து முடிவு வரை துப்பாக்கி சத்தம் காதை பிளக்க வைத்தது. இந்தாண்டு புத்தாண்டை ரசிகர்கள் அதிரடியாக தொடங்கும் வகையில் துணிவு பட ட்ரைலரில் அஜித்தின் தோற்றம், வசனம், நடனம் என அனைத்தும் தெறிக்கவிட்டிருந்தது.

Also Read: 6 முறை விஜய், அஜித் பொங்கலுக்கு மோதிக்கொண்ட படங்கள்.. அதிக வெற்றி யாருக்கு தெரியுமா?

இந்நிலையில் வாரிசு படக்குழு துணிவு ட்ரைலரை பார்த்து ஆடிப்போய்விட்ட நிலையில், வாரிசு பட ட்ரைலரை மாஸ் காட்சிகளுடன் வெளியிட முடிவு செய்தனர். ஆனால் வாரிசு பட ட்ரைலர் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி மாலை வெளியான நிலையில், தெலுங்கு பட ட்ரைலரை போல் உள்ளது என்றும் விஜயின் மாஸ் காட்சிகளே இல்லை என்றும் ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.ஒருமுறைக்கு மேல் அந்த ட்ரைலரில் பார்ப்பதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு வாரிசு பட ட்ரைலர் சொதப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 23 மில்லியன் பார்வையாளர்களை கடந்தும், 1.8 மில்லியன் லைக்ஸ்களுடன் துணிவு பட ட்ரைலரை தோற்கடிக்கும் முயற்சியில் வாரிசு படம் கைவிடப்பட்டது. நடிகர் விஜய்யின் வாரிசு படத்தை ப்ரோமோஷன் செய்ய பிரம்மாண்டமாக ஆடியோ லான்ச் நிகழ்ச்சியெல்லாம் நடித்தி, பலகோடி வரை அப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு செலவளித்த போதிலும், அஜித்தின் துணிவு பட ட்ரைலருடன் வாரிசு பட ட்ரைலர் தோற்றுவிட்டது.

Also Read:  தாறுமாறாக எகிறிய வாரிசு-வின் டிக்கெட் விலை.. ஒரு பாப்கார்ன், ஒரு கொக்ககோலா ஃப்ரீ என விளம்பரம் வேற

நடிகர் அஜித் துணிவு படத்திற்காக எந்த ஒரு ப்ரோமோஷன் வேலைகளிலும் அவரும் ஈடுபடவில்லை, துணிவு படக்குழுவும் ஈடுபடவில்லை. ஆனால் யூடியூபில் தற்போது வரை துணிவு பட ட்ரைலர் 55 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. விஜயின் வாரிசு பட ட்ரைலர் 33 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே கடந்துள்ளது. மேலும் துணிவு பட ட்ரைலர் ஆரம்பத்திலிருந்து இடையில் வரை யுடியூப் நிறுவனம் விளம்பரங்களை வாரி வழங்கியுள்ளது.

ஆனால் விஜயின் வாரிசு பட ட்ரைலரில், விளம்பரங்கள் இல்லாமல் உள்ளது. ட்ரைலரிலேயே விஜயின் வாரிசு மண்ணை கவ்வியுள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும், விஜயின் குடும்ப படமான வாரிசு வெற்றியாகுமா, அல்லது அஜித்தின் ஆக்ஷன் படமான துணிவு படம் வெற்றியடையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: போட்டி போட்டு மில்லியன் கணக்கில் ரசிகர்களை கூட்டும் வாரிசு, துணிவு.. கத இல்லனா வெளியில தலை காட்ட முடியாது

Trending News