வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கல்யாணம் பண்ணாமலே சுத்தலில் விட்ட நடிகர்.. விடாப்பிடியாய் தாலி கட்ட வைத்த வில்லி நடிகை

46 வயதானாலும் எந்த கவலையும் இல்லாமல் முரட்டு சிங்கிளாகவே வலம் வந்த நடிகர் ஒருவர், இப்போது திடீரென்று அவசர அவசரமாக காதல் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஆனால் பல வருடங்களாக இந்த நடிகர் காதலியை கல்யாணம் செய்யாமல் குடும்பம் மட்டும் நடத்த விரும்பி இருக்கிறார்.

இதில் உஷாரான அந்த வில்லி நடிகை தன்னுடைய வில்லத்தனத்தை காதலினிடமே காட்ட வேண்டியதாயிருச்சு. விடாப்பிடியாய் திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று பெரிய பஞ்சாயத்தை கூட்டிவிட்டார். வேறு வழி இல்லாமல் அந்த நடிகரும் காதலியின் கழுத்துல மூணு முடிச்சு போட்டுட்டார்.

ஆனா இவங்க திருமணம் புகைப்படத்தை பார்த்தா ஏதோ ஷூட்டிங் ஸ்பாட்ல எடுத்த போட்டோ போல இருக்கு என்று பலரும் நம்ப மறுத்தனர். ஆனால் உண்மைதான் என்பதை அவருடைய நெருங்கிய நண்பர் தெரியப்படுத்தினார். இப்போது இந்த ஜோடி வயது வித்தியாசத்தை எல்லாம் பொருட்படுத்தாமல் உல்லாசமாக தங்களது ஹனிமூன் கொண்டாட்டத்தில் ஜாலி பண்றாங்க.

Also Read: அந்தரங்க விஷயத்தில் தொடர்ந்து நச்சரித்த காதலன்.. நோ சொல்லியும் விடல, நடிகை எடுத்த அதிரடி முடிவு

ஒரு வேளை அந்த வில்லி நடிகை மட்டும் உஷாராகவில்லை என்றால், அந்த முரட்டு சிங்கிள் ஸ்ரெயிட்டா 60ம் கல்யாணம் தான் செஞ்சிருக்கணும். இவர் இப்போது டாப் நடிகர்களின் படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இப்பொழுது விட்டா அப்புறம் பிடிக்க முடியாது என்று விழித்துக் கொண்ட அந்த நடிகை விடாப்பிடியாய் கழுத்துல தாலி கட்ட வச்சிட்டாங்க. பாவம் அந்த காமெடி பீஸ் நடிகர் இனிமேல் வில்லி நடிகையை எப்படி சரிக்கட்ட போகிறார் என்று தெரியவில்லை.

அந்த அளவிற்கு இவர் சீரியலில் டெரர் பீஸ். ஆனா நிஜ வாழ்க்கையில் ரொம்பவே வித்தியாசமான கேரக்டர் என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக தெரிகிறது. அந்த வில்லியுடன் முரட்டு சிங்கிள் இப்போதெல்லாம் டான்ஸ் ஆடி, மனைவியுடன் ஜல்சா பண்ணுகிறார். இப்போதைக்கு இவர்கள் கொடுக்கிற அலப்பறை தான் ட்ரெண்டாகிறது.

Also Read: ஐட்டம் டான்ஸ் ஆடுறவ தான.. நைட் பார்ட்டிக்கு கூப்பிட்டு அத்துமீறிய நடிகர்

Trending News