வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விக்ரம் கேரியரை தூக்கி நிறுத்திய சூப்பர் ஹிட் படம்.. 21 ஆண்டுகளுக்கு முன் சிங்கம் போல வந்த சியான்

Super hit film that lifted Vikram’s career: விக்ரம் சினிமாவிற்குள் நுழைந்த ஆரம்பத்தில் அவமானத்தையும் தோல்விகளையும் சந்தித்த பின் தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். அப்படி கடந்து வந்த இவருடைய கேரியரில் மிகவும் மறக்க முடியாத பல படங்கள் வெற்றியை கொடுத்து சூப்பர் ஹிட் மாஸ் ஹீரோவாக இவரை உருவாக்கியிருக்கிறது.

அந்த வகையில் விக்ரமின் கேரியருக்கு அடிக்கல் நாட்டிய மிக முக்கியமான முதல் படம் சேது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படத்தை கொடுக்க ஆரம்பித்து விட்டார். அப்படித்தான் 2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்த தூள் படம். இப்படம் வெளிவந்து கிட்டத்தட்ட 21 வருடங்கள் ஆகி இருக்கிறது.

இன்னமும் இப்படத்தை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்புத் தட்டாத வகையில் மக்கள் மனதை கொள்ளையடித்து வருகிறது. இதில் ஜோதிகா, ரீமாசென், விவேக், பரவை முனியம்மா மற்றும் பசுபதி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை ஏ எம் ரத்தினம் தயாரித்திருக்கிறார்.

Also read: விக்ரம், சூர்யாவுக்கு நடுவே இருக்கும் மிகப்பெரிய மனக்கசப்பு.. கல்யாணத்திற்கு கூட கூப்பிடாததற்கு இதுதான் காரணம்

இப்படம் வெளிவந்த நேரத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த வசீகரா மற்றும் கமல் மாதவன் நடிப்பில் அன்பே சிவம் படமும் வெளியானது. ஆனால் இவர்கள் படத்தை ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு தூள் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் அளவிலும் லாபத்தை வாரி குவித்தது.

அத்துடன் இப்படத்தில் பறவை முனியம்மா பாடிய “சிங்கம் போல நடந்து வர செல்லப்பேராண்டி” இந்த பாடல் பட்டி தொட்டி எங்கெல்லாம் முணுமுணுக்கும் வகையில் தூள் கிளப்பியது. இதில் சொர்ணவாக தெலுங்கானா சகுந்தலா நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தாலும் இவரை பாராட்டும் வகையில் நடிப்பு பிரமாதமாக இருந்திருக்கும்.

இப்படத்தின் கதையானது கெமிக்கல் கம்பெனியில் இருந்து வெளிவரும் தேவை இல்லாத கழிவால் அங்கு இருக்கும் மக்கள் எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு அதை சரி செய்யும் விதமாக விக்ரம் எடுக்கும் முயற்சி பாராட்டக்கூடியதாக அமைந்திருக்கும். இதற்கிடையில் விவேக் மற்றும் மயில்சாமியின் காமெடி ட்ராக் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக இருக்கும்.

Also read: 40 சதவீத படபிடிப்போடு ஒதுங்கிக் கொண்ட அஜித்.. ஹிட் படத்திற்கு உயிரை கொடுத்து நடித்த விக்ரம்

Trending News