சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

காலை 8 மணிக்கே சரக்கடித்த சூப்பர் ஸ்டார்.. பல வருட சீக்ரெட்டை காழ்ப்புணர்ச்சியால் போட்டு உடைத்த பிரபலம்

திரைத்துறையை பொறுத்தவரையில் பல வருடங்களாக ரசிகர்கள் சூப்பர் ஸ்டாரை தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் கூட அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது. அதனாலேயே அவர் தற்போது மதிப்பும், மரியாதையும் கொண்ட மனிதராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் அப்படிப்பட்ட சூப்பர் ஸ்டார் பற்றி தற்போது பிரபல நடிகர் ஒருவர் கூறியிருக்கும் செய்தி அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. அதாவது சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் குடிப்பழக்கம் பற்றி நடிகர் ராதாரவி வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். ரஜினிக்கு புகைப்பழக்கம், குடிப்பழக்கம் இருப்பது அனைவருக்குமே தெரியும்.

Also read: 90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள பட்டியல்.. கமலை விட 3 மடங்கு அதிகம் வாங்கிய சூப்பர் ஸ்டார்

இதை அவரே பலமுறை வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார். ஆனால் உடலில் ஏற்பட்ட பிரச்சனையும் காரணத்தினால் தற்போது அவர் அந்த பழக்கத்தில் இருந்து முற்றிலும் விடுபட்டுள்ளார். பலரும் மறந்த விஷயத்தை தற்போது ராதாரவி பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக அம்பலப்படுத்தி இருக்கிறார்.

சுந்தர் சி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அருணாச்சலம். ஆனால் அந்த திரைப்படத்தை முதலில் பி வாசு தான் இயக்க இருந்தார். அப்பொழுது அவர் ராதாரவியை வில்லனாக தேர்வு செய்து வைத்திருக்கிறார். இடையில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக ராதாரவி அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார்.

Also read: கவுண்டமணியை பற்றி அதிர்ச்சியூட்டும் தகவலை சொன்ன பி வாசு.. ரஜினியிடமிருந்து கற்றுக்கொண்ட பழக்கம்

இந்த விஷயத்தை ராதாரவியிடம் கூறுவதற்காக ரஜினி அவரை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து இருக்கிறார். அதனால் அவர் ரஜினியை பார்க்க காலை 8 மணிக்கு சென்று இருக்கிறார். அப்போது ரஜினி அவரை குடிக்கும்படி கூறினாராம். அதன் பிறகு இருவரும் சேர்ந்து தண்ணி அடித்ததாக ராதாரவி கூறி இருக்கிறார்.

மேலும் காலையிலேயே நாங்கள் சேர்ந்து தண்ணி அடித்தோம் என்று அவர் குறிப்பிட்டு இருப்பதை பார்க்கும் போது நிச்சயம் அவர் ரஜினியை மறைமுகமாக குத்தி காட்டி பேசி இருப்பது நன்றாகவே தெரிகிறது. எப்படி என்றால் இந்த விஷயத்தை கூறும் போது அவர் ரஜினிக்கு அதிர்ஷ்டம் இருக்கிறது என்றும், அதனால்தான் திறமையான எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர்கள் இது முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியால் பேசியது மட்டும்தான் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also read: என்றுமே கிங் மேக்கர் நீங்க மட்டும் தான்.. ரஜினி இப்பவும் சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கான காரணம் இதுதான்

Trending News