தமிழ் சினிமாவில் 80, 90களில் முன்ணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. அதனால் எவர்கிரீன் நடிகை என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் சமீபத்திய பேட்டியில் பிரபல நடிகரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
அதில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலுடன் நான் திரிஷ்யம் படத்தில் நடித்தேன். அப்பட ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு 3 மாதங்களுக்கு முன்புதான் எனது மகள் நைனிகா பிறந்தாள்.
கைக்குழந்தையுடன் இருக்கும் என்னை தொடர்பு கொண்ட மோகன் லால் திரிஷ்யம் படத்தில் நீங்கள் தான் ஹீரோயினாக நடிக்க வேண்டும். அப்போதுதான் நன்றாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டார். எனது சூழ்நிலையை நான் அவரிடம் விளக்கினேன்.
ஷூட்டிங் நடந்த இடமே செல்போனில் சிக்னல் கூட கிடைக்காத இடம். தொலைதூரத்தில் உள்ள சிறு கிராமம். ஒரு மாத்திரை வாங்குவதற்குக்கூட வெகு தூரம் செல்ல வேண்டும். அதனால் தான் அப்படத்தில் நடிக்க நான் மறுத்தேன். ஆனால் நான் தான் அதில் நடிக்க வேண்டும் என மோகன்லால் தொடர்ந்து கூறினார். என்னால் முடியவே முடியாது என்று பிடிவாதமாக இருந்தேன்.
மோகன் லால் நடிக்க வலியுறுத்திய காரணத்தை உணர்ந்த மீனா!
எனினும் நீதான் நடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, டார்சர் செய்து என்னை அப்படத்தில் நடிக்க வைத்தார் அவர். அந்தப் படம் வெளியான பின் பெரிய ஹிட். அதன்பிறகு தான் நான் அந்தப் படத்தில் எவ்வளவு பெரிய விஷயம் என்பது எனக்குப் புரிந்து என்று கூறினார்.
இப்படத்தை ஜித்து ஜோசப் இயக்கினார். 5 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் 75 கோடிக்கு மேல் வசூலித்து பிளாகபஸ்டர் ஹிட்டித்தது. எளிய திரைக்கதையில் ஃபேமலி செண்டிமெண்ட் பாணியில் உருவான இப்படம் எல்லோரையும் கவர்ந்தது. தமிழ், கன்னடம், தெலுங்கிலும் இது ரீமேக் செய்யப்பட்ட து. மலையாளாத்தில் இப்படம், 2, 3 பாகங்கள் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.