திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கொலை பண்றது வீரம் இல்ல, 10 பேர காப்பாத்தறது தான் வீரம்.. அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் டீசர்

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்தின் இயக்குனர் சை கௌதம் ராஜ் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கழுவேத்தி மூர்க்கன். இந்த படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதை நடிகர் சிவகார்த்திகேயன் தான் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் சந்தோஷ் பிரதாப், சாயா தேவி, முனிஸ்காந்த் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு இமான் இசையமைத்த உள்ளார்.

Also Read : விஜய்யுடன் நடித்து முன்னேற துடித்த வாரிசு நடிகர்.. 10 நிமிட காட்சியோடு துரத்தி விட்ட லோகேஷ்

இந்நிலையில் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அருள்நிதி ஆரம்பத்தில் நடித்த வம்சம் படத்தில் கிராமத்து கெட்டப்பில் இருப்பார். இந்த படம் மாபெரும் வெற்றியை அடைந்த நிலையில் அதன் பிறகு திரில்லர் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். இந்த படங்களுக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து திரில்லர் படங்களில் நடித்தார்.

ஆனால் இப்போது பழையபடி கிராமத்து லுக்கில் கழுவேத்தி மூர்க்கன் படத்தில் பட்டையை கிளப்பி உள்ளார். மேலும் பெரிய மீசையுடன் கையில் அருவாள் என கெத்து காட்டி உள்ளார். கண்டிப்பாக அருள்நிதிக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும் என அவரது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Also Read : திரையில் காட்டாத 18+ விஷயங்களை ஓடிடியில் பார்க்கலாம்.. வெற்றிமாறனின் அதிரடி முடிவு

அதுமட்டுமின்றி இந்த படத்தில் நிறைய பஞ்ச் டயலாக்குகள் இடம்பெற்று உள்ளது. அதாவது மனுஷனை காப்பாத்த தான் கடவுள். ஆனா கடவுள் பெயரை சொல்லிக்கிட்டு குத்துகிட்டு சாகுறீங்களே, கொலை பண்றது வீரம் இல்ல, 10 பேர காப்பாத்தறது தான் வீரம் என வசனங்களை அருள்நிதி தெறிக்கவிட்டுள்ளார். மேலும் இந்த டீசர் இப்போது அருள்நிதி ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Trending News