வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பிரசன்னாவிற்கு முன் தயாரிப்பாளருடன் நடந்த விஷயம்.. சினேகாவை பற்றி புட்டு புட்டு வைத்த பயில்வான்

Bailwan who breaks the secret of Snegha: நடிகை சினேகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். தமிழில் அச்சம் உண்டு அச்சம் உண்டு படத்தில் நடிக்கும் பொழுது பிரசன்னாவுடன் ஏற்பட்ட காதலால் வீட்டின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். தற்போது இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

இதற்கிடையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும் விவாகரத்து பெற்று பிரியப் போவதாகவும் பல வதந்திகள் இணையத்தில் பரவி வந்தது. ஆனால் அது முற்றிலும் பொய் என்று இருவரும் இணைந்து வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிப்பது, விளம்பரங்களில் நடிப்பது மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது என சினேகா பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் நடிகைகளை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்து வரும் பயில்வான் தற்போது சினேகாவின் ரகசியங்களை புட்டு புட்டு வைத்திருக்கிறார். அதாவது ஆரம்பத்தில் முதன் முதலாக நடித்த படம் விரும்புகிறேன். ஆனால் இப்படம் வெளிவருவதற்கு முன் மாதவனுடன் நடித்த என்னவளே படம் தான் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து கமல், சூர்யா, விஜய், அஜித் போன்ற நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக இடம் பிடித்தார்.

Also read: 23 வருட சினிமா வாழ்க்கையில் சினேகா சேர்த்து வைத்த சொத்து.. பிசினஸிலும் கல்லாக்கட்டும் சிரிப்பழகி

அப்பொழுது மற்ற மொழிகளிலும் நடித்த இவர் பிரசன்னாவை காதலிக்கும் முன்பே வேறு ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக பயில்வான் கூறியிருக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளரான நாக் ரவியை திருமணம் செய்து கொள்ள மனசார முடிவெடுத்தார். அதனால் இரு வீட்டாரின் குடும்பத்தின் முன்னணியில் சினேகா மற்றும் தயாரிப்பாளர் நாக் ரவி மோதிரம் மாத்தி நிச்சயதார்த்தத்தை செய்து கொண்டார்கள்.

இந்நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்து இரண்டு மாதங்களில் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி கொண்டார்கள். ஆனால் கடைசியில் சினேகாவிற்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நாக் ரவியை திருமணம் செய்து கொள்ளாமல் பிரிந்து விட்டார். அதன் பிறகு தான் பிரசன்னாவையே காதலித்து திருமணம் செய்து இருக்கிறார். பொதுவாக தமிழ் கலாச்சாரம் படி மோதிரம் மாற்றிக் கொண்டாலே பாதி கல்யாணம் முடிந்து விட்டதாக அர்த்தம்.

இன்னும் சொல்ல போனால் பாதி புருஷன் பொண்டாட்டி என்று தான் சொல்வார்கள். அந்த நிலைமைக்குப் போன சினேகா திடீரென்று சில காரணங்களை சொல்லி தெலுங்கு தயாரிப்பாளர் நாக் ரவியை கழட்டிவிட்டார் என்று பேசி இருக்கிறார் பயில்வான் . கல்யாணம் ஆகி ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிக்கவில்லை என்றாலே விலகிக் கொள்ளும் இந்த காலகட்டத்தில் இப்படி வாய்க்கு வந்தபடி ஏதாவது உளறுவதையே வேலையாய் வைத்திருக்கிறாயா என்று சினேகா பற்றிய பேசிய பயில்வானை நெட்டிசன்கள் வச்சு செய்கிறார்கள்.

Also read: சிரிப்பழகி சினேகாவை டேட்டிங் செய்த 4 ஹீரோக்கள்.. உதடு கடி பிரச்சனையால் மண்ணைக் கவ்விய தரமான படம்

Trending News