ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பாட்டுல இல்ல நேரிலேயே ரஜினி பதிலடி கொடுக்க நேரம் வந்துருச்சு.. இளைய தளபதிக்கு ஆப்படிக்கும் நாள்

Actor Rajini and Vijay: பல வருடங்களாக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து கொடி கட்டி கெத்தாக பறந்து வருகிறார். கிட்டத்தட்ட 72 வயதிலும் தன்னுடைய ஸ்டைலையும், நடிப்பையும் கொஞ்சம் கூட கம்மியாகாமல் மாஸ் ஹீரோவாக நடிக்க முடியும் என்றால் அது கண்டிப்பாக ரஜினியால் மட்டும் தான் முடியும். அதற்குப் பொருத்தமாகத்தான் இவருக்கு கிடைத்த பட்டம் சூப்பர் ஸ்டார்.

ஆனால் இந்த பட்டத்தை பறிப்பதற்கு பல நடிகர்கள் போட்டி போட்டு கமுக்கமாக வந்த நிலையில், தற்போது அப்பட்டமாகவே விஜய் மற்றும் இவருடைய ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் பட்டத்தை அபகரிக்கும் வகையில் பல விஷயங்களை செய்து வருகிறார்கள். தற்போது இது பற்றியான பேச்சுக்கள் தான் சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது.

Also read: ஒரு டேக்கில் நடிப்பதற்கு நான் என்ன கமலா.? இசையமைப்பாளரை வாயடைக்க வைத்த சூப்பர் ஸ்டார்

என்னதான் ரசிகர்கள் ஆசைப்பட்டாலும் அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்குமாறு விஜய் இதுவரை எந்த ஒரு விஷயமும் செய்யாமல் இருப்பது தான் வருத்தப்பட வேண்டிய விஷயம். ஆனால் இந்த விஷயத்தை முதலில் கொளுத்திப் போட்டது நடிகர் சரத்குமார். அதாவது வாரிசு ஆடியோ லாஞ்சில், அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் என்று போற போக்கில் ஒரு நெருப்பை கொளுத்தி போட்டு விட்டார்.

அது தற்போது நாலா பக்கமும் கொழுந்து விட்டு எரிகிறது. இந்த பட்டம் ஒன்றும் ரஜினிக்கு அவ்வளவு எளிதாக கொடுத்ததல்ல, அவருடைய நடிப்புக்கும், ஸ்டைலுக்கும் ரசிகர்கள் கொடுக்கப்பட்ட பொக்கிஷம். அதை எளிதாக யாரும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். இதை தெரிந்தும் விஜய் ஏன் மௌனமாக இருக்கிறார் என்பது தெரியவில்லை.

Also read: 2 பிள்ளை பெற்ற பிறகு ரஜினிக்கு வந்த காதல்.. அந்த நடிகையை தான் கட்டுவேன் என முரண்டு பிடித்த சூப்பர் ஸ்டார்

ஆனால் இது சம்பந்தமாக ரஜினி, ஜெயிலர் பாடத்தில் வெளியான ஹுக்கும் பாடலில் சரியான பதிலடி கொடுத்திருப்பார். ஆனாலும் தற்போது நேரிலேயே பதிலடி கொடுக்க நேரம் வந்துவிட்டது. ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இம்மாதம் 28ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த விழாவில் ரஜினி பேசுவதை தான் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கண்டிப்பாக ரஜினி ஆடியோ லாஞ்சில் பேசும் பொழுது சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து முடிவு கட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக தெளிவாகப் பேசி முடிவு கட்டி விடுவார். இந்த நாளில் தான் ரஜினி, மொத்தமாக விஜய்க்கு ஆப்பு வைக்கப் போகிறார்.

Also read: தடுக்கி விழுந்த 5 நடிகர்களை தூக்கி விட்ட சூப்பர் ஸ்டார்.. வில்லனாய் தெறிக்கவிட்ட ரகுவரன்

Trending News