Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..இன்று உச்ச நீதிமன்றத்தின் அதிரடி முடிவு என்ன?

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..இன்று உச்ச நீதிமன்றத்தின் அதிரடி முடிவு என்ன?

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான விவகாரம் தற்போது தமிழக அரசுக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.


திருப்பரங்குன்றம் மலையில் பாரம்பரியமாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே உள்ள தீப மண்டபத்தில்தான் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருவதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால்,தர்கா அருகே அமைந்துள்ள தீபத்தூணிலும் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.


இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடிய நிலையில்,நவம்பர் 20ஆம் தேதி நீதிபதிகள் அமர்வு நவம்பர் 24ஆம் தேதி மட்டும் தீபத்தூணில் தீபம் ஏற்ற இடைக்கால அனுமதி வழங்கியது.பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அதிகாரிகள் மற்றும் கோவில் நிர்வாகத்தின் பிரதிநிதிகள் மட்டுமே செல்ல வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டது.
இதற்கிடையில்,ஒருநாள் அனுமதியே எதிர்காலத்தில் நிரந்தர உரிமை கோருவதற்கு வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டு தமிழக அரசு மறுஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.இந்த மனு நவம்பர் இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதனால் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கும் முடிவு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.நாளை திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றப்படுமா? அல்லது வழக்கமான தீப மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்படுமா? என்ற கேள்விக்கு நீதிமன்றத்தின் முடிவே பதிலளிக்கும்.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.