
Gossip: உச்ச நடிகரின் மகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு காதலித்து மனம் பிடித்த கணவனை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். பல வருடங்களாக ஒன்றாக இருந்த இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர்.
ஆனாலும் விவாகரத்தில் உறுதியாக இருந்து பிரிந்து விட்டனர். இதனால் தனது பேர குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து உச்ச நடிகர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். இந்த சுவடு முடிவதற்குள் மற்றொரு பிரபலத்தின் வாரிசுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.
கடந்த வருடம் தான் மிகப்பிரமாண்டமாக தனது மகளுக்கு திருமணத்தை முடித்து வைத்தார். பெரும் புகழோடும் மகள் வாழ்வார் என எதிர்பார்த்த நிலையில் ஒரே வருடத்தில் திருமணம் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது.
வாரிசை நினைத்து கலங்கும் உச்ச நடிகர்
அதாவது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த நடிகரின் மகள் விவாகரத்து செய்யும் முடிவுக்கு வந்துவிட்டார். மேலும் பெட்டி படுக்கையுடன் உடன் தனது தந்தை வீட்டுக்கு வந்து விட்டாராம்.
சினிமாவில் இதெல்லாம் சகஜம் நான் பேசி மருமகனை கண்டிக்கிறேன் என நடிகர் எவ்வளவோ மகளுக்கு சமாதானம் கூறியிருக்கிறார். ஆனால் எதற்கும் மகள் அசைவு கொடுத்த பாடு இல்லையாம்.
எனக்கு அந்த ஆளே வேண்டாம் என்று உறுதியாக இருக்கிறார். இதனால் தனது வாரிசை நினைத்து அந்த நடிகர் நொந்து போய் உள்ளார். மகளின் வாழ்க்கை இவ்வளவு சீக்கிரமா முடிந்து விட வேண்டும் என்ற வேதனை அவருக்கு உள்ளது.