புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

ஆட்டம் கண்ட டாப் சீரியல்.. டிஆர்பியால் விஜய் டிவி எடுத்த அதிரடி

டிஆர்பி ரேட்டிங்கிற்காகவே ஒவ்வொரு சேனல்களும் விதவிதமான யுத்திகளை பயன்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், விஜய் டிவி மற்ற சேனல்களுக்கு எல்லாம் கடும் போட்டியாக மாறிக்கொண்டிருக்கிறது. இதனால் நல்ல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சிகளை கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கிறது

இந்நிலையில் விஜய் டிவியின் புத்தம் புதிய குடும்ப சீரியல் ஆன பாரதிதாசன் காலனி சீரியலுக்கு பெரும் எதிர்பார்ப்பை கிடைக்கும் என சமீபத்தில் பிரம்மாண்டமாகத் துவங்கப்பட்டது. ஆனால் மதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கு ரசிகர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காமல் போனது.

Also Read: புத்தம்புது சன் டிவி சீரியலால் விரட்டியடிக்கப்பட்ட விஜய் டிவி.. இணையத்தைக் கலக்கிய டிஆர்பி ரேட்டிங்!

இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு காலனியில் குடியிருக்கும் மக்களை சுற்றியே நகர்வது போன்ற கதைதான். இதில் கதாநாயகி ஐஸ்வர்யா ராய், பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷீலா, கருணா விலாசினி, பிரபாகர் சந்திரன் உள்ளிட்ட பல முன்னணி சீரியல் பிரபலங்கள் நடித்ததால் டாப் சிரியல் லிஸ்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் பாரதிதாசன் காலனி சீரியல் கடந்த சில வாரங்களாகவே இந்த சீரியல் டிஆர்பி-யில் கடைசி இடத்தைப் பெற்றுக் கொண்டிருப்பதால் விஜய் டிவி இந்த சீரியலை ஊத்தி மூட முடிவு எடுத்திருக்கிறது.

Also Read: யாராச்சும் இவருக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா.. மகா மட்டமாக போட்டோ சூட் நடத்திய ரம்யா பாண்டியன்

மேலும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் வரும் அக்டோபர் 9-ஆம் தேதி மாலை முதல் துவங்குவதால் ஒவ்வொரு நாளும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாக வேண்டும் என்பதற்காக டிஆர்பி-யில் டல்லடிக்கும் சீரியல்களை விஜய் டிவி முடித்து விடுகிறது.

அந்த வரிசையில் ஏற்கனவே முத்துக்குள் சிப்பி என்ற புத்தம் புது சீரியல் கிளைமாக்ஸ் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து பாரதிதாசன் காலனியும் முடிவுக்கு வருகிறது.

Also Read: பிக்பாஸ் மூலம் கிடைத்த ஜாக்பாட்.. சினிமாவில் அசத்தல் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்

Trending News