Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்
ADVERTISEMENT

கௌதம் மேனனுக்கு ஹீரோ கொடுத்த டார்ச்சர்.. காக்க காக்க படமே தப்பா எடுத்துட்டேன்னு புலம்பல்

கௌதம் மேனனுக்கு ஹீரோ கொடுத்த டார்ச்சர்.. காக்க காக்க படமே தப்பா எடுத்துட்டேன்னு புலம்பல்

Director Gauham Menon: கௌதம் மேனன் இயக்குனர் என்பதையும் தாண்டி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கான வேலைகளையும் ஒரு பக்கம் அவர் பார்த்து வருகிறார். அதில் அவருடைய கனவு படமான துருவ நட்சத்திரம் […]

Director Gauham Menon: கௌதம் மேனன் இயக்குனர் என்பதையும் தாண்டி தற்போது நடிகராக கலக்கிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அடுத்தடுத்த படங்களை இயக்குவதற்கான வேலைகளையும் ஒரு பக்கம் அவர் பார்த்து வருகிறார்.

அதில் அவருடைய கனவு படமான துருவ நட்சத்திரம் தான் பெரும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. எப்படியாவது அப்படத்தை வெளியிட்டு விட வேண்டும் என அவரும் படாத பாடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் காக்க காக்க பட சீக்ரெட் ஒன்று வெளிவந்துள்ளது. சூர்யா, ஜோதிகா நடிப்பில் மிகப்பெரிய ஹிட் அடித்த இப்படம் தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டது.

வெங்கடேஷ், அசின் நடிப்பில் உருவான இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். அதன் ஷூட்டிங்கின் போது ஹீரோ ஒவ்வொரு காட்சிகளும் இப்படித்தான் இருக்க வேண்டும் என ரொம்பவும் டார்ச்சர் கொடுத்தாராம்.

கௌதம் மேனனுக்கு ஹீரோ கொடுத்த டார்ச்சர்

தமிழில் எப்படியெல்லாம் காட்சிகள் வைக்கப்பட்டதோ அதே மாதிரி தான் இருக்க வேண்டும் என சொல்லுவாராம். அதேபோல் தெலுங்கு மக்கள் சோகமான முடிவை விரும்ப மாட்டார்கள்.

அதனாலேயே இப்படத்தின் இறுதியில் ஹீரோயின் உயிரோடு இருப்பது போல் கௌதம் மேனன் காட்டினாராம். விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கில் கூட இருவரும் இறுதியில் சேர்ந்து விடுவார்கள்.

ஆனால் தமிழில் இந்த இரு படங்களின் முடிவும் சோகமாக தான் இருக்கும். தெலுங்கில் மாற்றப்பட்டதற்கு பின்னணியில் ஹீரோவின் நெருக்கடிகள் தான் இருந்திருக்கிறது.

இதை அவரே ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். மேலும் மலையாளத்தில் ஒரு படம் இயக்கும் முடிவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.