Venkat Prabhu: நாளை தியேட்டரில் விஜய்யின் கோட் படம் வெளியாக உள்ள நிலையில் தீபாவளி போல் ரசிகர்கள் இந்த நாளை கொண்டாட காத்திருக்கிறார்கள். விஜய் அரசியல் கட்சியில் இறங்கி உள்ளதால் தியேட்டரில் யாரும் தமிழக வெற்றி கழகத்தின் கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்.
மேலும் கொண்டாட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் கோட் படத்தையும் தயாரித்திருக்கிறது. ஏற்கனவே பிகில் படத்தால் நஷ்டத்தை சந்தித்ததாக அர்ச்சனா கல்பாத்தி கூறியது சர்ச்சையை கிளப்பி இருந்தது.
ஆனாலும் இப்போது கோட் படத்தில் வெங்கட் பிரபுவை நம்பி பணத்தை வாரி இறைத்திருக்கிறார். ஏதாவது ஜிஎஸ்டி உட்பட கோட் படம் உருவாக கிட்டத்தட்ட 380 கோடி செலவாகி உள்ளதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் அர்ச்சனா கூறி இருந்தார். இதில் விஜய்யின் சம்பளம் மட்டுமே 200 கோடி என்று கூறப்படுகிறது.
கோட் படத்தின் மொத்த பட்ஜெட்
இதற்கு காரணம் பிகில் படத்திற்கு ஓவர் சீஸில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் விஜய்க்கு இவ்வளவு சம்பளம் கொடுக்க ஒற்றுக்கொண்டதாக அர்ச்சனா கூறியிருந்தார். மேலும் இப்போதும் கோட் படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது, டிக்கெட் பெரியளவில் விற்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற இடங்களிலும் இப்போது கோட் படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் சினிமா துறையில் இருந்து வந்த தகவலின் படி கோட் படம் கிட்டத்தட்ட 270 கோடி மட்டுமே வசூல் செய்யும் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. இதன் மூலம் 110 கோடி நஷ்டத்தை கோட் AAபடம் சந்திக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால் நாளை படம் வெளியாக உள்ள நிலையில் மக்கள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து தான் வசூல் நிலை பற்றி அறிய முடியும். விஜய்யின் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் விமர்சன ரீதியாக தோல்வியுற்ற நிலையில் கோட் படம் அதை ஈடுகட்டும் என தளபதி ரசிகர்கள் நம்புகின்றனர்.
எதிர்பார்ப்பை கிளப்பிய கோட்
- ஒரிஜினல் கோட் விலையே 900 தான்
- படத்தையும் அதுலயே விட்டுருக்கலாமே, கோட் ரகளை மீம்ஸ்
- கோட் பட பாடல்கள் சொதப்ப அனிருத் தான் காரணம்