செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

கணக்குப் பார்க்காமல் வாரி கொடுத்த தில் ராஜு.. வாரிசு பட நடிகர்களின் மொத்த சம்பள விவரம்

வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் வாரிசு திரைப்படம் இன்று ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது. தில் ராஜூ தயாரித்துள்ள இந்த திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரபு ,பிரகாஷ்ராஜ் உட்பட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருக்கின்றனர். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ள படம் என்பதால் இதில் நாம் எதிர்பார்க்காத பல நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்தப் படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர், நடிகைகளும் முன்னணி நட்சத்திரங்கள் தான். அதனால் இவர்களுக்கான சம்பளமே நிச்சயம் மிகப்பெரிய தொகையாக தான் கொடுக்கப்பட்டிருக்கும். அப்படி பார்த்தால் படத்தின் மொத்த பட்ஜெட்டில் முக்கால்வாசி இவர்களுக்கான சம்பளத்திலேயே முடிந்திருக்கும் என்று தெரிகிறது.

Also read: வாரிசு படத்தின் முதல் நாள் வசூல் விவரம்.. முதல் இடத்தை காப்பாற்ற போராடும் விஜய்

அந்த வரிசையில் வாரிசு படத்தின் நடிகர், நடிகைகளுக்கு என்ன சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம். அதாவது இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் விஜய்க்கு அப்பாவாக நடித்திருக்கிறார். இதை நாம் ட்ரைலரிலேயே பார்த்திருப்போம். அந்த வகையில் அவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக 2 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறதாம்.

அதைத்தொடர்ந்து இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பிரபுவுக்கும் 2 கோடி சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக விஜய்க்கு வில்லனாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ் 1.5 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். மேலும் விஜய்க்கு அண்ணனாக நடித்திருக்கும் நடிகர் ஷாம் ஒரு கோடி சம்பளமாக பெற்றிருக்கிறார்.

Also read: விஜய் வச்சு டி-20 ஆடாமல், டெஸ்ட் மேட்ச் ஆடிட்டாங்க! வாரிசு படம் ஓக்கேவா.? திரை விமர்சனம்

அவரைத் தொடர்ந்து விஜய்யின் மூத்த அண்ணனாக நடித்திருக்கும் பிரபல தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்துக்கு 60 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று முக்கிய கேரக்டரில் நடித்துள்ள குஷ்பூ 40 லட்சமும், விஜய்க்கு அம்மாவாக நடித்திருக்கும் ஜெயசுதா 30 லட்சமும், நண்பராக வரும் யோகி பாபு 35 லட்சமும் சம்பளமாக பெற்றிருக்கிறார்கள்.

இவர்களுடன் சேர்த்து கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா இதுவரை வாங்காத அளவுக்கு சம்பளத்தை பெற்றிருக்கிறார். அதாவது அவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக நான்கு கோடி சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாஸ் ஹீரோவான விஜய்க்கு 110 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்திருக்கிறார்கள். இது தவிர இயக்குனர், இசையமைப்பாளர் உட்பட மற்ற அனைவருக்கும் மிகப்பெரிய தொகை தான் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள்.

அப்படி பார்த்தால் வாரிசு திரைப்படத்தின் மொத்த பட்ஜெட்டும் இந்த சம்பளத்திலேயே அடங்கி இருக்கும் என்று தெரிகிறது. தற்போது வெளிவந்துள்ள இந்த திரைப்படம் நல்ல கலெக்ஷனை பெற்றால் மட்டுமே தயாரிப்பாளர் இந்த செலவு அனைத்தையும் ஈடுகட்ட முடியும். இருப்பினும் தில் ராஜு வாரிசு படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடிக்கும் என்ற நம்பிக்கையில் கணக்கு பார்க்காமல் நடிகர்களுக்கு சம்பளத்தை வாரி இறைத்திருக்கிறார். அவருடைய இந்த கணக்கு ஒர்க் அவுட் ஆனதா என்பது விரைவில் தெரிந்து விடும்.

Also read: பக்கா ஃபேமிலி என்டர்டைன்மென்ட் ஒன் மேன் ஷோ.. வாரிசு அனல் பறக்கும் ட்விட்டர் ரிவ்யூ

Trending News