வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவின் மொத்த சம்பளம்.. 16 லட்சம் பணப்பெட்டி போக இவ்வளவு லட்சமா?

Bigg Boss 7 Poornima: இதுவரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் தற்போது வருகின்ற சீசன் 7 தான் ரொம்பவே ஒஸ்ட் அண்ட் வேஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு மக்களிடமிருந்து வெறுப்பை சம்பாதித்து விட்டது. அதற்கு காரணம் போட்டியாளர்கள் ஒரு விதத்தில் இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் கமலஹாசனின் ஒரு தலை பட்சமாக கொடுக்கும் தீர்ப்பு தான்.

அதனாலேயே எப்பொழுதுதான் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு குக் வித் கோமாளியை ஆரம்பிப்பார்கள் என்று ஆவலுடன் மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வருடம் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி 97 நாட்களைக் கடந்து இருக்கிறது.

மொத்தம் 23 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த சீசனில் தற்போது விஷ்ணு, அர்ச்சனா, தினேஷ், மணி, மாயா, விசித்திரா, விஜய் ஆகிய 8 போட்டியாளர்கள் பயணித்து வருகிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடந்த Ticket to Finale வெற்றி பெற்ற விஷ்ணுவை தவிர மற்ற 7 போட்டியாளர்களும் இந்த வார நாமினேஷனில் இருக்கிறார்கள்.

Also read: பிக் பாஸ் வீட்டை விட்டு 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறிய நிக்சன்.. மஜாவாக சுற்றிய மன்மதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதனைத் தொடர்ந்து வழக்கம்போல் 14வது வாரத்தில் வைக்கப்படும் பணப்பெட்டியை யார் எடுப்பார்கள் என்று இருந்த நிலையில் பூர்ணிமா புத்திசாலித்தனமாக 16 லட்சத்தை குருநாதர் வைத்தவுடன் இதுதான் சான்ஸ் என்று அடுத்த நிமிஷமே யோசித்து பணப்பெட்டியை தூக்கி விட்டார். அந்த வகையில் கிட்டத்தட்ட 90 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய பயணம் தொடர்ந்து இருக்கிறது.

மேலும் 90 நாட்களுக்கு இவருடைய சம்பளமாக கிட்டத்தட்ட 14 லட்சம் ரூபாய் பெற்றதாக கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பணப்பெட்டி 16 லட்சம் இவருடைய சம்பளமாக 14 லட்சம் சம்பாதித்து மொத்தமாக 30 லட்சம் ரூபாயை கைப்பற்றி இருக்கிறார். இதற்கிடையில் பூர்ணிமாவின் அலப்பறையை தாங்க முடியாத மக்கள் இவரை இரண்டாவது வாரத்திலேயே வெளியேற்ற நினைத்தார்கள்.

ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் ஒவ்வொரு வாரமும் எஸ்கேப் ஆன பூர்ணிமா கடைசியில் அடித்த ஜாக்பாட் மூலம் பல லட்சங்களை சம்பாதித்து விட்டு தற்போது வெளியில் போய் ஆட்டம் போட்டு என்ஜாய் பண்ணி வருகிறார். இதனை தொடர்ந்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் இன்று எலிமினேட் ஆகி போவது விசித்ரா. அந்த வகையில் ஓல்டு இஸ் கோல்டு என்று சொல்லும் அளவிற்கு மூத்த போட்டியாளராக கிட்டத்தட்ட 95 நாட்களாக பிக் பாஸ்க்குள் இருந்து மக்கள் மனதை வென்ற ஒருவர் இவராகத்தான் இருக்க முடியும்.

Also read: உங்க 5 பேருக்கு தம்மு வாங்கி கொடுத்தே பிக் பாஸ் சொத்து அழிஞ்சிடும் போல.. கேமராவில் சிக்கிய காஜி ஜோடிகள்

Trending News