வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சுதா கொங்காராவுக்கு நடந்த சோகம்.. கையில் கட்டுடன் வெளிவந்த பரிதாபமான புகைப்படம்

கோலிவுட்டில் இறுதிச்சுற்று, சூரரைப் போற்று போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சுதா கொங்கரா கமர்சியல் படங்களை இயக்குவதை காட்டிலும், தரமான படங்களை கொடுக்க நினைப்பவர். இதனாலேயே இவருக்கென்றே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.

இந்த சூழலில் சுதா கொங்கராவிற்கு ஏற்பட்ட சோகம் பலரையும் கலங்க வைத்திருக்கிறது. இயக்குனர் சுதா கொங்கரா படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி, கையில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கையில் பெரிய கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவருடைய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Also Read: சூர்யாவை தாண்டிய சுதா கொங்கரா சம்பளம்.. வாயைப் பிளக்கும் திரையுலகம்

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப் போற்று, 6 தேசிய விருதுகளை வாங்கி குவித்தது மட்டுமின்றி, அந்த படம் இப்போது ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் இயக்கிய சுதா கொங்கராவே இந்த படத்தை ஹிந்திலும் இயக்கி வருகிறார்.

இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கிடையில் சுதா கொங்கரா படப்பிடிப்பு தளத்தில் விபத்தில் சிக்கி அவருடைய கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் வலி அதிகமாக உள்ளதால் ஒரு மாத காலத்திற்கு ரெஸ்ட் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

Also Read: ஒற்றுமையே இல்லாத இருவேறு ஹீரோக்களை களமிறக்கும் சுதா கொங்கரா.. வியப்பில் இருக்கும் கோலிவுட்

‘இது வேண்டாத ஓய்வு’ என்று கருத்துப் பதிவுடன், அடிபட்டு கட்டு போட்டு இருக்கும் கையுடன் சுதா கொங்கரா தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ‘சீக்கிரம் குணமாகி விடுவீர்கள்’ என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

சுதா கொங்காராவுக்கு நடந்த சோகம்

director-sudha-1-cinemapettai
director-sudha-1-kongara-cinemapettai

தற்போது சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமிக்ஸ் சூட்டிங் ஒரு மாத காலத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படத்தை முடித்துவிட்டு சூர்யா அல்லது சிம்புவின் படத்தை அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கையில் கட்டுடன் வெளிவந்த பரிதாபமான சுதா கொங்காரா புகைப்படம்

director-sudha-2-cinemapettai
director-sudha-2-kongara-cinemapettai

Also Read: ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடிக்கும் சூர்யா.. சுதா கொங்கரா படத்திற்கு முன் போடும் மாஸ்டர் பிளான்

Trending News