சினிமாவில் ஏகப்பட்ட வெற்றி படங்களை கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அகராதியில் தோல்வி என்பது இருக்கக் கூடாது என நினைப்பவர். ஆகையால் அவருடைய பிளாப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்காக தற்போது பக்கா பிளான் போட்டிருக்கிறார்.
ரஜினியின் கேரியரில் அட்டர் பிளாப் படம் என்றால் அது பாபா தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அண்ணாமலை, வீரா, பாட்ஷா படங்களுக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் பாபா. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், சங்கவி, கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.
Also Read: அண்ணாத்த பட தோல்விக்கு ரஜினியோ, சிவாவோ காரணம் இல்ல.. இவங்களால தான் மொத்தமா போச்சு
இப்போது பாபா படத்தை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதுப்பொலிவுடன் மீண்டும் திரையிடுவதற்காக அனைத்து வேலைகளும் படுச்சோராக நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் புதிதாக எடிட்டிங் மற்றும் கலர் கிராஃபிக் செய்யப்பட்டு ரஜினியும் மீண்டும் டப்பிங் பேசி உள்ளார்.
அத்துடன் படத்தின் ஆரம்பத்தில் அவரது உரையாடலோடு படம் துவங்க உள்ளதால், படத்தின் சில காட்சிகளுக்கு புதிய குரல் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப கலர் கிராபிக்ஸ் செய்யப்பட்டுள்ள பாபா படத்தின் புதிய ட்ரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது.
Also Read: 16 வயதினிலே படத்தில் ரஜினி வாங்கிய சம்பளம்.. கடைசி வரை ஏமாற்றிய பாரதிராஜா
இது சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று எக்கச்சக்கமான லைக்குகளை குவித்து, ஷேர் செய்யப்படுகிறது. அத்துடன் என் மனதிற்கு நெருக்கமான ஒரு திரைப்படம் என்றால் அது பாபா. அந்த படத்தின் ரீமாஸ்டர் செய்யப்பட்ட பதிவு விரைவில் வெளியிடப்படும் எனவும் படத்தைக் குறித்த அப்டேட்டை அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் புது பொலிவுடன் உருவாகும் பாபா படம் வரும் டிசம்பர் 12ஆம் தேதி ரஜினியின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ரீ ரிலீஸ் ஆக உள்ள பாபா படத்தின் நீளம் 2.30 மணி நேரத்திற்குள் சுருக்கப்பட்டதாகவும் படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்திருக்கிறார்.
Also Read: புதுவிதமான பிரம்மாண்டத்தில் உருவாகும் பாபா.. இந்த காட்சியல்லாம் தூக்குங்க என கட்டளையிட்ட ரஜினி