திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

SJ சூர்யாவுக்கு லிப் லாக் கொடுத்த பிரியா பவானி சங்கர்.. எதிர்பார்ப்பை மிரள வைக்கும் பொம்மை ட்ரெய்லர்

எஸ் ஜே சூர்யா, தான் ஒரு இயக்குனர் என்பதையே மறந்துவிட்டார். அந்த அளவுக்கு அவர் இப்போது நடிப்பில் மட்டுமே அதிக கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். அதற்கேற்றார் போல் அவர் ஒவ்வொரு படத்திலும் காட்டும் வித்தியாசமான நடிப்பு ரசிகர்களை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது ராதா மோகன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் பொம்மை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது. பட தலைப்புக்கு ஏற்றவாறு ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே எஸ் ஜே சூர்யா ஒரு பொம்மைக்கு மேக்கப் போடுவது போல் காட்டப்படுகிறது.

Also read: எனக்கு போட்டி இவங்க 4 பேரும் தான்.. வெளிப்படையாய் சவால் விட்ட ப்ரியா பவானி சங்கர்

அதைத்தொடர்ந்து ஜவுளி கடையில் வேலை செய்யும் அவர் அங்கிருக்கும் பொம்மையை கேட்பதில் இருந்து அந்த பொம்மையை உயிருள்ள ஒரு பெண்ணாகவே நினைப்பது போல் ட்ரெய்லர் செல்கிறது. இப்படி ஒரு கற்பனை உலகத்திற்குள் இருக்கும் அவர் அந்த பொம்மை மேல் மிகவும் பொசசிவ் ஆக மாறுகிறார்.

இதற்கு இடையில் பிரியா பவானி சங்கர், எஸ் ஜே சூர்யாவுக்குள் இருக்கும் உறவும் காட்டப்படுகிறது. இதிலிருந்தே அந்த பொம்மை பிரியா பவானி சங்கர் தான் என்றும் தெரிகிறது. அந்த அளவுக்கு அவர் பொம்மை போல் அதிகபட்ச மேக்கப்புடன் ட்ரெய்லர் முழுக்க வருகிறார்.

Also read: ஒர்க் அவுட்டில் கிக் ஏற்றிய பிரியா பவானி சங்கர்.. படாத பாடுபடும் ஜிம் மாஸ்டர்

ஒரு கட்டத்தில் மன பாதிப்படைந்து பொம்மைக்காகவே உருகும் எஸ் ஜே சூர்யா சைக்கோ தனமான நடவடிக்கையிலும் ஈடுபடுகிறார். இப்படி பல அதிரடி காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் இந்த ட்ரெய்லர் அதிக கவனம் ஈர்த்துள்ளது. அதிலும் முக்கியமாக எஸ் ஜே சூர்யா, ப்ரியா பவானி சங்கர் இடையே இருக்கும் லிப் லாக் காட்சியும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ரொம்பவும் அடக்க ஒடுக்கமாக ஹோம்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியா இப்படி தைரியமாக லிப் லாக் கொடுத்திருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இருப்பினும் முன்னணி அந்தஸ்தை அடைய அவர் இப்படி தாராளமாக நடித்திருப்பதாகவே தெரிகிறது. அந்த வகையில் இந்த பொம்மை வரும் ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Trending News