கேப்டனாக கொண்டாடப்படும் விஜயகாந்த் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்றே சொல்லலாம். எதார்த்தமான மனிதராக இருக்கும் இவர் நடிகர் சங்க தலைவராக இருந்த காலம் தான் பொற்காலம் என்று கூட கூறுவது உண்டு. உண்மையில் அது மறுக்க முடியாத நிதர்சனமும் கூட.
அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்பு அவருடைய தலைமையில் நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சி மதுரையில் நடைபெற்றது. இது முழுக்க முழுக்க கார்கில் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிதி திரட்டும் ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே நடத்தப்பட்டது. அதற்காக ஒட்டு மொத்த நட்சத்திரங்களையும் டிரெயினில் அழைத்துக் கொண்டு விஜயகாந்த் வந்திருக்கிறார்.
Also read: இருந்த இடம் தெரியாமல் போன விஜயகாந்த்.. மொத்த கண்ட்ரோலையும் கையிலெடுத்து வீழ்த்தப்பட்ட கேப்டன்
அப்போது தான் பிரபலங்கள் அனைவரும் சாப்பிட புக் செய்திருந்த ஹோட்டலில் ரசிகர்களின் கூட்டம் கூடியது அவருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனால் கேப்டன் கொஞ்சம் கூட தாமதிக்காமல் ட்ரெயின் நின்று கொண்டிருந்த ஸ்டேஷன் அதிகாரியை சந்தித்து நிலைமையை விளக்கி இருக்கிறார். மேலும் 10 நிமிடம் வண்டியை நிறுத்தும் படியும் கேட்டு இருக்கிறார்.
உடனே அந்த அதிகாரியும் மேலிடத்திற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி அனுமதி வாங்கி இருக்கிறார். அதன் பிறகு விஜயகாந்த் அந்தப் பகுதியில் இருந்த ஒரே ஒரு பரோட்டா கடைக்கு ஓடியிருக்கிறார். திடீரென்று கேப்டன் கடை முன் நின்றதை பார்த்த அந்த மாஸ்டர் அதிர்ச்சியில் முழித்தபடி நின்று இருக்கிறார்.
Also read: புத்தாண்டில் ஷாக் கொடுத்த ரோபோ சங்கர்.. விஜயகாந்த் போல மெலிந்து போன புகைப்படம்
அதை எல்லாம் கண்டுகொள்ளாத விஜயகாந்த் ஷாக்க கொற என்ற ரீதியில், இருக்கிற அத்தனை பரோட்டாவையும் பார்சல் கட்டு என கூறியிருக்கிறார். உடனே சுதாரித்துக் கொண்ட அந்த நபரும் சூடாக போட்டு தருகிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால் கேப்டன் இருக்கிற பரோட்டாவையும், சால்னாவையும் வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார். அதன் பிறகு ஒரு பேப்பர் பிளேட்டில் அனைவருக்கும் உணவை பகிர்ந்து கொடுத்திருக்கிறார்.
விலை உயர்ந்த விதவிதமான உணவுகளை சாப்பிட்ட நட்சத்திரங்கள் அனைவரும் அந்த பரோட்டாவை சங்கோஜம் இல்லாமல் வாங்கி சாப்பிட்டு இருக்கின்றனர். இதில் அப்போது முன்னணி இடத்தில் இருந்த குஷ்பூ, சிம்ரன், தேவயானி உள்ளிட்டவர்களும் இருந்திருக்கின்றனர். அதன் பிறகு தான் ட்ரெயின் புறப்பட்டு சென்றிருக்கிறது. இப்படி தன்னை நம்பியவர்கள் பசியில் வாட கூடாது என கேப்டன் எடுத்த இந்த துரித முயற்சி கேட்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Also read: பார்த்த உடனேயே சிரிப்பை மூட்டும் 6 நடிகர்கள்.. சின்ன கவுண்டர் விஜயகாந்த் ஆகவே வாழும் நமோ நாராயணா