
Gossip: அந்த நடிகைக்கும் காதலுக்கும் கொஞ்சம் கூட செட் ஆகவில்லை. பால் நிறத்தில் பளிச்சென்று இருக்கும் அந்த நடிகைக்கு ரசிகர்கள் ஏராளம் உண்டு.
கோலிவுட் டோலிவுட் என கலக்கிய நடிகை இப்போது பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் வாரிசு ஹீரோவுடன் ஏற்பட்ட காதல் முறிவு தான்.
பெரிய குடும்பத்து வாரிசை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைத்தார் நடிகை. ஆனால் அந்த ஹீரோ கடைசி நேரத்தில் அல்வா கொடுத்துவிட்டார்.
அந்த விரக்தியில் பாலிவுட் பக்கம் சென்ற நடிகை அங்கு ஒருவருடன் டேட்டிங் செய்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
பாதியிலேயே இடத்தை காலி செய்த நடிகை
ஆனால் அந்த நடிகரும் ஹீரோயினை கழட்டி விட்டார். அந்த சோகத்தில் இருந்த நடிகையை தோழிகள்தான் ஹோலி கொண்டாட்டத்திற்கு அழைத்து வந்திருக்கின்றனர்.
நடிகையும் சந்தோஷமாக இருப்பது போல் காட்டிக் கொள்ள எக்ஸ்ட்ரா ஆட்டம் போட்டிருக்கிறார். ஆனால் சிறிது நேரத்திலேயே காத்து போன பலூன் போல் முகம் வாடிப் போய்விட்டார்.
இதற்கு காரணம் முன்னாள் காதலர் யங் ஹீரோயின் உடன் அந்த கொண்டாட்டத்தில் கொடுத்த அலப்பறை தான். ஆரம்பத்தில் நடிகரை வெறுப்பேற்ற இந்த நடிகை ஆட்டம் போட்டிருக்கிறார்.
ஆனால் போகப் போக முன்னாள் காதலர் புது காதலியுடன் செய்த அலப்பறையில் நடிகை நொந்து போய்விட்டார். அதனால் பாதியிலேயே கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு கிளம்பிவிட்டாராம்.