திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரகாஷ்ராஜின் உண்மை முகம்.. 50 கோடி கொடுத்தாலும் அந்த மாதிரி நடிக்க மாட்டேன்

தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி போன்ற பலமொழிகளில் ஏகப்பட்ட படங்களில் கதாநாயகன் வில்லன் குணச்சித்திர கதாபாத்திரம் என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடலெடுக்கும் நடிகர் தான் பிரகாஷ் ராஜ்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது விஜய்யுடன் இணைந்து நடித்த படம் வாரிசு. இவர் 10 வருடங்கள் கழித்து மீண்டும் இந்தப்படத்தில் விஜய்யுடன் இணைகிறார். எனவே இவர்கள் இருவரின் காம்போ பக்காவாக ஒர்க் அவுட் ஆகும் என்பதால் இந்தப் படத்திலும் விஜய்க்கு வில்லனாக பிரகாஷ் ராஜ் நிச்சயம் மிரட்டி இருப்பார்.

Also Read: தனுஷ்-பிரகாஷ்ராஜ் கூட்டணியில் வெளியான 4 படங்கள்.. உங்களுக்கு பிடித்த படம் எது

இந்நிலையில் பிரகாஷ் ராஜின் உண்மையான தற்போது வெளிப்பட்டு இருக்கிறது. சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் சம்பாதிக்கும் பணத்தை பல வகைகளில் சேர்த்து வைக்கவும், முதலீடு செய்யவும் பார்ப்பார்கள்.

ஆனால் பிரகாஷ் ராஜை பொருத்தவரை காசுக்கு ஆசைப்படக் கூடிய கேரக்டர் இல்லையாம். 50 கோடிகள் தருகிறோம் இந்த படத்தில் நடியுங்கள் என்று சொன்னால் கூட நடிக்க மாட்டாராம். அவருக்கு கதை பிடித்து இருந்தால் மட்டுமே நடிப்பாராம்.

Also Read: 2022 ஆம் ஆண்டில் வில்லனாக மிரட்டிய 5 ஹீரோக்கள்.. கேஜிஎஃப் வில்லனுக்கே டஃப் கொடுத்த ரோலக்ஸ்

இது நமக்கு செட்டாகுமா என்று யோசிக்கக் கூடிய ஒரு மனிதராம். கிடைக்கிற படத்தை எல்லாம் நடித்துக் கொடுத்து காசு பணத்தை சேர்த்து வைக்கும் எண்ணம் துளி கூட பிரகாஷ்ராஜுக்கு இருக்காதாம். மேலும் பிரகாஷ்ராஜ் நடிப்பை தாண்டி விவசாயத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்.

இப்போது அவர் நிறைய விவசாயம் செய்கிறாராம். இளைஞர்களையும் விவசாயம் செய்ய தூண்டுகோலாகவும் இருக்கிறார். இதனால் மனநிறையுடன் விவசாயம் செய்யும் பிரகாஷ்ராஜ், மீதம் இருக்கும் நேரத்தில் தான் பிடித்தமான கதையை தேர்வு செய்து நடித்து வருகிறாராம்.

Also Read: பிரகாஷ்ராஜ் லெவலுக்கு பார்வையாலேயே மிரட்டிய வில்லன்.. கமலுக்கே டஃப் கொடுத்தவருக்கு வந்த கெட்ட நேரம்

Trending News