வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

ஆளும் கட்சியினால் தோல்வியடைந்த பாபா.. ரஜினி தூசி தட்ட இப்படி ஒரு வெறித்தனமான காரணமா!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் டிசம்பர் 12. இந்த நாள் அவருடைய ரசிகர்களுக்கு திருவிழா என்றே சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் ரஜினியின் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்படும். அந்த நாளில் ரஜினியும் ரசிகர்களை சந்திப்பார். திரைபிரபலங்களின் வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் இருக்கும். ரஜினி இந்த வருடம் தன்னுடைய 72 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

வருடா வருடம் ரஜினியின் ஏதாவது ஒரு சூப்பர் ஹிட் திரைப்படம் ரீரிலீஸ் ஆகும். ரஜினியின் சூப்பர் ஹிட் படங்களான முரட்டுக்காளை, பாட்ஷா, படையப்பா போன்றவை இதுபோல் மீண்டும் ரிலீஸ் ஆகி இருக்கிறது. ரஜினிகாந்த் இந்த முறை கையில் எடுத்திருக்கும் திரைப்படம் பாபா. ரஜினி பாபா படத்தை ரீரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பது தான் பலருக்கும் ஆச்சர்யமாக இருக்கிறது.

Also Read: நெல்சனால் வருத்தத்தில் இருக்கும் சூப்பர் ஸ்டார்.. தவறவிட்ட வாய்ப்பால் வேதனையில் இருக்கும் ரஜினி

ரஜினியின் கேரியரில் அட்டர் பிளாப் படம் என்றால் அது பாபா தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. ‘அண்ணாமலை’, ‘வீரா’, ‘பாட்ஷா’ படங்களுக்கு பிறகு சுரேஷ் கிருஷ்ணா ரஜினியை வைத்து இயக்கிய திரைப்படம் பாபா. இந்த படத்தில் மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, டெல்லி கணேஷ், சுஜாதா, ரியாஸ்கான், எம்.என்.நம்பியார், ஆஷிஷ் வித்யார்த்தி, சாயாஜி ஷிண்டே, சங்கவி, கருணாஸ் ஆகியோர் நடித்திருந்தனர்.

இந்த படத்தின் கதை, திரைக்கதையை எழுதி தயாரித்தது ரஜினிகாந்த் தான். இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் சூழ்ச்சிகளால் தோல்வியை சந்தித்தது என்ற கருத்தும் உள்ளது. ரஜினிக்கு இருந்த ரசிகர்கள் பலத்தை உடைக்க இந்த படம் தோல்விக்கு தள்ளப்பட்டது. பாபா படத்திற்கு பிறகு இனி ரஜினி நடிக்கவே மாட்டார் என முடிவே எடுத்துவிட்டனர்.

Also Read: 125 கோடி பத்தல, பணத்தாசை யாரை விட்டுச்சு.. ரஜினியின் பாலிசியை கையிலெடுத்த தளபதி விஜய்

ரஜினி இப்போது இந்த படத்தை தூசி தட்ட காரணமே இந்த உண்மைகளை சொல்லத்தான் என்கிறார்கள். அப்போது பாபா பட சூட்டிங் நடந்து கொண்டிருக்கும் போது அப்போதைய முதலமைச்சர் நடிகர் ரஜினிகாந்தை நேரில் வந்து பார்க்குமாறு சொல்லியிருக்கிறார். இப்போது அது பற்றிய காட்சியையும் புதிதாக சேர்க்க சொல்லியிருக்கிறார் சூப்பர் ஸ்டார்.

மேலும் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா ஒரு பேட்டியில் பேசும் போது சமீபத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்ற ‘காந்தாரா’ படத்தை பார்த்த பின்தான் ரஜினிக்கு பாபா ரீரிலீஸ் யோசனை வந்தது என்று சொல்லியிருக்கிறார். படத்தி ஒளி, ஒலி, வண்ணம் மெருகேற்றப்பட்டு புதிய காட்சிகளும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

Also Read: 90களில் மாஸ் காட்டிய 5 நடிகர்களின் சம்பள பட்டியல்.. கமலை விட 3 மடங்கு அதிகம் வாங்கிய சூப்பர் ஸ்டார்

Trending News