Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணத்தை நடத்தலாம் என்று சொல்வதற்கு ஏற்ப பாண்டியன் விட்டு மருமகளாக தங்கமயிலை பொய் பித்தலாட்டம் பண்ணி சரவணனுக்கு கல்யாணத்தை பண்ணி வைத்து விட்டார். ஆனால் அதை ஒவ்வொரு நாளும் மறைக்க வேண்டும் என்பதற்காக தங்கமயில் பதட்டத்துடனையே இருந்து வருகிறார்.
எப்பொழுது மாட்டுவோம் நம்மளை பற்றி எந்த விஷயம் தெரிந்து விடும் என்ற நினைப்பில் ஒவ்வொரு நிமிடமும் தத்தளித்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் முதன் முதலாக தங்கமயில் சிக்குவதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதாவது தங்கமயில் மற்றும் சரவணன் கல்யாணத்தை பதிவு பண்ண வேண்டும் என்பதற்காக பாண்டியன் ஆதார் அட்டை கேட்டார்.
தங்கமயிலை பற்றி விசாரிக்க போகும் மீனா
ஆதார் அட்டை கொடுத்து விட்டால் நம்முடைய வயசு தெரிந்துவிடும். அப்படி என்றால் சரவணன் விட நான் மூத்தவர் என்பதும் வெளிவந்து விடும் என்ற பதட்டத்தில் தங்கமயில் ஆதார் அட்டையை கொடுக்காமல் சமாளித்து விடுகிறார். ஆனாலும் சரவணன், உங்க வீட்டில் இருக்கும் ஆதார் அட்டையை நீ போய் வாங்கிட்டு வா என்று தங்கமயிலை அனுப்பி வைக்கிறார்.
வீட்டிற்கு போன தங்கமயில் நடந்த விஷயத்தை பாக்கியத்திடம் சொல்லி புலம்புகிறார். பாக்கியம் இதை எப்படியாவது சமாளிக்க வேண்டும் என்று யோசிக்கிறார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பா வெளியே டீ கடையில் டீ குடிக்கிறார். அங்கே எதிர்ச்சியாக வந்த பாண்டியன் மற்றும் செந்தில் இருவரையும் பார்த்து பேசிக்கொள்கிறார்கள்.
அப்பொழுது பாண்டியன் பதிவு பண்ண வேண்டிய விஷயத்தை பற்றி சொல்கிறார். உடனே தங்கமயில் அப்பா அவளுடைய ஆதார் அட்டை என்னிடம் தான் இருக்கிறது என்று பரிஸ்ஸில் வைத்திருந்த ஆதார் அட்டையை எடுத்து பாண்டியனிடம் கொடுத்து விடுகிறார். பாண்டியனும் அதை பார்க்காமல் வாங்கிக் கொள்கிறார். இதை எடுத்துட்டு பாண்டியன் வீட்டில் இருப்பவர்களிடம் கொடுக்கும் பொழுது தங்கமயிலின் வயது தெரிந்துவிடும்.
இதைப் பற்றி எதுவும் தெரியாமல் வீட்டிற்கு வந்த தங்கமயில் அப்பா, பாண்டியனை வெளியே வைத்து பார்த்தேன். அவர் தங்கமயிலின் ஆதார் அட்டையை கேட்டார் கொடுத்து விட்டேன் என்று சொல்லப் போகிறார். அப்பொழுதுதான் வயசு வித்தியாசத்தை பற்றி அவருக்கு தெரிய வரப்போகிறது. ஆனால் இதில் மாட்டிக் கொள்ளாதபடி தப்பித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக பாக்கியா மகளுக்கு ஐடியா கொடுக்கப் போகிறார்.
அதன்படி இப்போதைக்கு இந்த பிரச்சனையை சமாளிக்க வேண்டும் என்றால் ஆதார் அட்டையில் போட்டிருக்கும் வயது தவறானது என்று பொய் சொல்லி விடு என ஐடியா கொடுக்கிறார். அதன்படி வீட்டிற்கு போகும் தங்கமயிலிடம் ஆதார் அட்டையின் வயசு வித்தியாசத்தை பற்றி கேட்க போகிறார்கள். உடனே தங்கமயில் அது தவறாக போட்டிருக்கிறது என்று சொல்லி சமாளிக்க போகிறார்.
தங்கமயில் என்ன சொன்னாலும் அந்த குடும்பம் ஒட்டுமொத்தமாக நம்பி விடுகிறது. அந்த வகையில் இந்த ஒரு விஷயத்தையும் அனைவரும் நம்பி விடுவார்கள். ஆனால் மீனாவிற்கு மட்டும் ஆரம்பத்தில் இருந்து தங்கமயில் மற்றும் அவருடைய குடும்பத்தில் மீது ஏதோ சந்தேகம் வந்து கொண்டே இருக்கிறது. அதனால் இதைப் பற்றி கூட தெரிந்து கொள்ள வேண்டும் என்று மீனா முயற்சி எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் நடந்த சம்பவம்
- பாண்டியனின் மகளைக் குறி வைத்த ராஜியின் சித்தப்பா
- பாண்டியனை மறுபடியும் ஏமாற்ற போகும் தங்கமயில்
- பாண்டியனின் மகளைக் குறி வைத்த ராஜியின் சித்தப்பா