புதன்கிழமை, ஜனவரி 8, 2025

இந்த வார பிக்பாஸில் சிம்பு அடித்து துரத்தும் மங்குனி அமைச்சர் யார் தெரியுமா.? இறுதிக்கட்டத்தில் அல்டிமேட்

டிஸ்னி ஹாட்ஸ்டார் இல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்க இன்னும் இரண்டு வாரங்களே உள்ளது. தற்போது இந்நிகழ்ச்சியில் 7 ஹவுஸ் மேட்ஸ் உள்ளனர்.

இந்நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்குவதால் போட்டிகளும் கடுமையாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றன. தற்போது தாமரை, நிரூப், பாலா, ஜூலி, அபிராமி, சுருதி, ரம்யா ஆகியோர் பிக்பாஸ் அல்டிமேட்ல் உள்ளனர்.

சென்ற வாரம் வையல் கார்டு என்ட்ரியாக வந்த கலக்கப்போவது யாரு வந்த சதிஷ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என கூறப்படுகிறது. ஏனென்றால் மீதமுள்ள ஐந்து பேரும் கடைசி வாரமான ஃபைனல் சுற்றுக்கு செல்ல உள்ளனர்.

சென்றவாரம் ஹவுஸ்மேட்கள் நாமினேட்செய்தாலும், இறுதியில் அனைவரும் நாமினேட் செய்யப்படுவதாக பிக்பாஸ் அறிவித்தார். இந்நிலையில் மக்கள் ஓட்டுக்கள் படி முதலாவதாக அபிராமி இந்த வீட்டில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

அபிராமி எதுவாக இருந்தாலும் சட்டென்று ரியக்ட் கொடியவர். அதுமட்டுமல்லாமல் எதுவாக இருந்தாலும் முகத்துக்கு நேராகவே பேசக்கூடியவர். இந்நிலையில் அபிராமியை தொடர்ந்து சுருதியும் வெளியேற்றபாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீதமுள்ள பாலா, நிரூப், ஜூலி, தாமரை, ரம்யா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு செல்ல உள்ளனர். இந்த ஐவரில் இருந்த ஒருவர் பிக்பாஸ் அல்டிமேட் இன் டைட்டில் பட்டத்தை வெல்ல உள்ளார். இன்னும் இரண்டே வாரங்கள்தான் உள்ளதால் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Trending News