சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

2 படம் நடிச்சதுக்கே இவ்வளவு அல்டாப்பா.. ஓவர் சீன் போட்டு கடுப்பேத்தும் சில்வண்டு

Gossip: எத்தனை படம் நடிச்சாலும், பல விருதுகளை வாங்கி குவித்தாலும் சில நடிகைகள் இன்னும் தன்னடக்கத்தோடு இருக்கின்றனர். ஆனால் ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி விட்டு ஏதோ பெரிய ஹீரோயின் ரேஞ்சுக்கு அலப்பறை செய்து வருகிறார் அந்த நடிகை.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான இவர் அந்த ரியாலிட்டி ஷோ மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். ஆனால் பட வாய்ப்பு கிடைத்ததும் அவர் போட்ட சீன் கொஞ்ச நஞ்சம் கிடையாது.

அதற்கேற்றார் போல் சேனல் தரப்பும் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது. அந்த ரியாலிட்டி ஷோவில் அவருக்கு கொடுக்கப்பட்ட முன்னுரிமை கூட சர்ச்சையாக மாறியது. இப்படி எல்லாம் இருந்தும் கூட அந்த நடிகை தன் அலட்டலை மட்டும் குறைக்கவில்லை.

ஓவர் அலப்பறை செய்யும் நடிகை

பாடல் மூலம் தான் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமானார். அதன் பிறகு தான் நடிப்பெல்லாம். சேனலில் மட்டுமல்லாமல் இசை கச்சேரி, வெளிநாட்டு கலை நிகழ்ச்சி ஆகியவற்றிலும் இவர் கலந்து கொண்டு கை நிறைய காசு பார்க்கிறார்.

சமீபத்தில் கூட வெளிநாட்டு நிகழ்ச்சிக்காக ஒரு பெரிய நிறுவனம் இவரை அணுகி இருக்கிறது. முதலில் ஓகே சொன்ன சில்வண்டு பிறகு தன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் டிக்கெட் போட்டால் தான் வருவேன் என வீம்பு செய்திருக்கிறார்.

இதனால் நொந்து போன அந்த நிறுவனம் நடிகையை வைத்து விளம்பரம் எல்லாம் செய்தாயிற்று. இனிமேல் என்ன செய்ய முடியும் என ஒட்டுமொத்த குடும்பத்துக்கும் டிக்கெட் போட்டு அழைத்து சென்றிருக்கிறார்கள்.

இதுதான் இப்போது சின்னத்திரை வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது இப்படியே போனால் இருக்கிற கொஞ்ச நஞ்ச பெயரையும் கெடுத்துக் கொள்ள வேண்டியதுதான். இந்த அளவுக்கு ஆட்டம் போட்டவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள். அது தெரியாமல் இந்த குழந்தை இப்படியெல்லாம் செய்கிறது என பேசி வருகின்றனர்.

ஹாலிவுட் நடிகை ரேஞ்சுக்கு சீன் போடும் சில்வண்டு

Trending News