தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வெளியாகும் புதிய படங்கள்,ஏற்கெனவே தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் வசூலிலும் திரையிடல் எண்ணிக்கையிலும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன.அந்த வகையில்,நடிகர் தனுஷின் ‘ஓம்’ படத்தின் வருகையால் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சீன்’படம் தியேட்டர்களை இழந்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தற்போது கவனம் பெற்றுள்ளது.
ஆரம்பத்தில் குறைந்த எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியான சூர்யாவின் ‘சீன்’படம்,ரசிகர்களின் வரவேற்பைத் தொடர்ந்து தனது தியேட்டர்களில் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.குறிப்பாக, 250 திரையரங்குகளில் தொடங்கிய இப்படம், பின்னர் 460 தியேட்டர்கள் வரை விரிவடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் படக்குழுவினரும் படத்தின் தியேட்டர் வரவேற்பை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால்,தனுஷின் ‘ஓம்’ திரைப்படம் நவம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானதைத் தொடர்ந்து நிலைமை மாறியுள்ளதாகக் கூறப்படுகிறது. புதிய படத்தின் வருகையால் திரையரங்குகளின் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக,‘சீன்’திரைப்படம் சுமார் 400 தியேட்டர்களை இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் தற்போது வெறும் 60 தியேட்டர்களில் மட்டுமே இப்படம் திரையிடப்படுவதாக வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
ஓம் படம் 250 தியேட்டர்களிலிருந்து 460 தியேட்டர்கள் வரை வளர்ந்த நிலையில், திடீரென “சீன் ” 60 தியேட்டர்களுக்கு சுருங்கியிருப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.இந்த மாற்றத்தால் நடிகர் சூர்யா மிகுந்த வருத்தத்தில் இருப்பதாகவும் வலைப்பேச்சு தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.ரசிகர்களின் வரவேற்பும் வசூலும் தொடர்ந்து கவனிக்கப்படும் நிலையில்,அடுத்தடுத்த நாட்களில் ‘சீன்’ திரைப்படத்தின் நிலைமை எப்படி இருக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.




