சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

மாஸ் ஹீரோவின் வளர்ச்சியால் ஆட்டம் கண்ட வாரிசு.. அசால்டாக நினைத்து அதிர்ச்சியில் வாயடைத்துப் போன பிரபலம்

மாஸ் ஹீரோவை பற்றிய பேச்சு தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. ஆரம்பத்தில் அவருடைய என்ட்ரியை அசால்டாக நினைத்த அந்த வாரிசு இப்போது அதிர்ச்சியில் செய்வதறியாது வந்து போய் இருக்கிறாராம்.

அரசியல்ல சாதிக்கிறது எல்லாம் அவ்வளவு சாதாரணமா? பழம் தின்னு கொட்டை போட்டவர்களுக்கே சில சமயம் நாக்கு தள்ளிவிடும். அப்படி இருக்கும்போது இந்த ஹீரோ வந்த வேகத்தில் மண்ணை கவ்வ தான் போகிறார் என அரசியல் வட்டாரமே நமுட்டு சிரிப்பு சிரித்தது.

ஆனால் நடிகரின் அசுர வளர்ச்சி இப்போது ஒட்டுமொத்த பிரபலங்களையும் வாயடைக்க வைத்திருக்கிறது. அதிலும் சமீபத்தில் நடிகரின் கட்சியில் சேர நீ நான் என போட்டி போட்டுக் கொண்டு வந்த மக்களை பார்க்கும் போதே ஒரு பீதி கிளம்பியது.

Also read: வாரிசு நடிகையால் கைநழுவி போன வாய்ப்பு.. விட்ட இடத்தை பிடிக்க நடிகை செய்யும் தந்திரம்

அதில் இரண்டே நாளில் 50 லட்சம் உறுப்பினர்கள் எல்லாம் மிகப்பெரிய சாதனை தான். அதனாலயே தற்போது வாரிசு கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறாராம். ஏற்கனவே ரேஸ் நடிகையை வைத்து இவருடைய பெயரை டேமேஜ் செய்வதற்கு வேலைகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அதை கூட பெரிதாக எடுத்துக் கொள்ளாத வாரிசு தற்போது முக்கிய பிரச்சினையில் சிக்கி விடுவோமோ என்ற பயத்தில் இருக்கிறாராம். பேசாமல் சினிமாவிலேயே காலத்தை ஓட்டி இருந்தால் கூட இந்த தலைவலி வந்திருக்காது என தனக்கு நெருக்கமானவர்களிடம் அவர் புலம்பி வருவதாக தகவல்கள் கசிந்து உள்ளது.

Also read: காதல் என்ற பெயரில் வாழ்க்கையில் கபடி விளையாடிய ஹீரோக்கள்.. திருமணத்தையே வெறுக்கும் நடிகை

Trending News