பா ரஞ்சித் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான நட்சத்திரம் நகர்கிறது படம் நேர்மையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் சியான் விக்ரமின் 61வது படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார். சமீபத்தில் இப்படத்தின் பூஜை போடப்பட்டது. ஜிவி பிரகாஷ் இசை அமைக்க ஞானவேல் ராஜா தனது ஸ்டுடியோ கிரீன் மூலம் தயாரிக்கிறார். சென்னை, கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடக்க உள்ளது.
Also Read : கோப்ராவிற்கு பின் எகிற போகும் விக்ரமின் மார்க்கெட்.. அடுத்தடுத்து 3 பெரிய இயக்குனருடன் கூட்டணி
விக்ரம் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோப்ரா படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. மிகப்பெரிய பட்ஜெட்டில், விக்ரம் பல கெட்டப்புகள் போட்டு பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இப்படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்து சேர்ந்தது.
இதனால் பா ரஞ்சித்யிடம் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் அதுபோன்ற கதையை தயார் செய்யுமாறு விக்ரம் கட்டளையிட்டுள்ளார். ரஞ்சித்தும் அதற்கு ஏற்றார் போல் கதையை தயார் செய்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
Also Read : 20 நிமிடம் குறைத்தும் கல்லா கட்ட முடியாத கோப்ரா.. 2ம் நாள் வசூலை பார்த்து அதிர்ச்சியில் விக்ரம்
இந்நிலையில் படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு உள்ளாகவே இப்படத்தின் சாட்டிலைட் உரிமம் விற்று விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நெட்ஃபிக்ஸ் ஓடிடி நிறுவனம் 59 கோடிக்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் விசாரித்து பார்த்தால் தான் உண்மை நிலவரம் தெரிந்துள்ளது.
அதாவது பா ரஞ்சித் தனது சொந்த தயாரிப்பில் தயாரிக்கும் படமும், பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படமும் சேர்த்து 59 கோடிக்கு நெட்ஃபிக்ஸ் வாங்கி உள்ளது. ஆனால் விக்ரம் படத்திற்கு மட்டும் இவ்வளவு கோடி விற்கப்பட்டுள்ளதாக வெளியில் கூறப்பட்ட வருகிறது.
Also Read : ஒரு நடிகரை மட்டும் விட்டுக்கொடுக்காத பா ரஞ்சித்.. 6 படத்தில் வாய்ப்பு கொடுத்தும் கிடைக்காத அங்கீகாரம்