திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

காதும் காதும் வைத்தது போல் நடந்த திருமணம்.. ரகசியத்தை அம்பலப்படுத்திய வில்லன் நடிகரின் வாரிசு

Gossip: இப்போது அந்த வாரிசு நடிகரின் திருமணம் பற்றிய பேச்சு தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. கல்யாணம் நடந்து சில மாதங்கள் கழிந்த நிலையில் முக்கிய ரகசியம் ஒன்றை நடிகரின் வாரிசு அம்பலப்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வில்லன் நடிகரின் மகன் சில படங்களில் துண்டு துக்கடா கேரக்டரில் நடித்திருக்கிறார். பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் டான்ஸ் ஷோ என அவ்வப்போது தலைகாட்டி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவருக்கு நடந்த திருமணம் தான் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது. கல்யாணம் நடந்தபோது மணமகளை பார்த்த பலரும் பொண்ணுக்கு வயசு அதிகம் இருக்கும் போல என வெளிப்படையாக அதிர்ச்சியை காட்டினர்.

ரகசியத்தை ஓப்பன் செய்த வாரிசு

ஆனால் அது உண்மைதான் என்பது போல் நடிகரே விஷயத்தை ஓபன் செய்திருக்கிறார். ஏற்கனவே எட்டு வயது மகளுடன் இருந்த பெண்ணை தான் வாரிசு நடிகர் காதலித்து திருமணம் செய்திருக்கிறார். ஆனால் நடிகர் வீட்டில் இதற்கு கொஞ்சம் கூட ஆதரவு இல்லையாம்.

இருவரும் தனி குடுத்தனம் நடத்தும் அளவுக்கு நெருங்கி பழகியதை பார்த்து தான் வில்லன் நடிகர் திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார். ஆனாலும் பெண்ணுக்கு ஒரு மகள் இருக்கிறார் என்ற ரகசியத்தை மட்டும் காதும் காதும் வைத்த மாதிரி காப்பாற்றி இருக்கிறார்கள்.

ஆனால் நடிகர் போது தன்னுடைய காதல் கதையை மீடியாவில் வெட்ட வெளிச்சம் ஆக்கிவிட்டார். இதனால் வில்லன் நடிகர் மகன் மீது செம கடுப்பில் இருக்கிறாராம்.

Trending News