திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லோகேஷ் இயக்கும்போது நா செத்தா கூட பரவாயில்ல.. சென்டிமென்ட் ஆக பேசி லியோ பட வாய்ப்பு வாங்கிய வில்லன்

Director Lokesh Kangaraj: பல எதிர்பார்ப்புகளோடு விஜய்யின் நடிப்பில் உருவாகும் படம் தான் லியோ. இப்படத்தின் அப்டேட்டை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது புதிதாய் வந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வருட தீபாவளிக்கு ரிலீசாகும் என அறிவிப்பு வந்துள்ள நிலையில் இதன் படப்பிடிப்பு நிறைவு பெற்று வருகிறது. அவ்வாறு சமீபத்தில் சென்னையில் படப்பிடிப்பை மேற்கொண்ட லோகேஷ் இப்படத்தின் இத்தகைய செட்டப்பில் உருவாக இருந்த அனைத்து காட்சிகளும் நிறைவு பெற்றதாக கூறியுள்ளார்.

Also Read: குணசேகரனிடம் சிக்கி சீரழியும் சிறுசு முதல் பெருசு.. நாக்க புடுங்குற மாதிரி கேள்வி கேட்ட மருமகள்

இது ஒரு புறம் இருக்க, இவர் இயக்கும் படங்கள் தொடர் வெற்றி அடைவதால், இவர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று பலர் எதிர்பார்ப்பை முன்வைக்கின்றனர். அவ்வாறு இந்திய திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை உருவாக்குபவர் போன்ற பன்முகத் திறமை கொண்டவர் தான் அனுராக் காஷ்யப். இவர் இமைக்கா நொடிகள் என்னும் படத்தில் வில்லன் கதாபாத்திரம் ஏற்றி நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவ்வாறு பாலிவுட் சினிமாவில் முக்கிய பிரபலமான இவர் பேட்டி ஒன்று கூறுகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படமாவது நடித்து விட வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து அவர் படத்தில் இறப்பது போன்ற காட்சியை ஏற்றாலும், அவற்றுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Also Read: தத்ரூபமாக அம்மனாக காட்சியளித்த 5 நடிகைகள்.. சாமினா இப்படித்தான் இருப்பாங்க என நம்ப வைத்த நீலாம்பரி

மேலும் அவர் படத்தில் நான் இறப்பது போன்ற காட்சியில் நடிக்க விரும்புகிறேன் எனவும் லோகேஷ் கனகராஜை புகழ்ந்து பேசினார். அதை அறிந்த லோகேஷ் கனகராஜ் இவரின் பேச்சுக்கு இணங்க, தற்பொழுது லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார்.

அவ்வாறு சென்னையில் படப்பிடிப்பை முடித்துள்ள லோகேஷ் தற்பொழுது காஷ்மீரில் படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார். அதுவும் அனுராக் காஷ்யப் இன் காட்சிகளே அங்கு படமாக்கப்பட்டு வருகிறது. இதுபோன்று சென்டிமென்ட் ஆக நெகிழ்ந்து  பேசி தற்பொழுது லோகேஷ் படத்தில் வாய்ப்பு பெற்றுள்ளார் அனுராக் காஷ்யப். இப்படத்தில் இவரின் ரோல் என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read: அண்ணன் எப்ப கிளம்புவான் திண்ணை எப்ப காலி ஆகும்னு இருந்த அருள்நிதி.. உச்சகட்ட ராஜதந்திரம் இதான்

Trending News