Biggboss 7: இப்போது சோஷியல் மீடியாவை திறந்தாலே பிக்பாஸ் பற்றிய கமெண்ட்டுகள் தான் வந்து குவிகிறது. ஆரம்பத்தில் இயல்பாக இருந்த இந்த நிகழ்ச்சி இப்போது இது ரத்த பூமி என்று சொல்லும் அளவுக்கு ரணகளமாக இருக்கிறது. அதிலும் போட்டியாளர்கள் டைட்டிலை அடிப்பதற்காக செய்யும் தகிடு தத்தம் ஒவ்வொன்றும் வேற லெவல்.
பிக்பாஸ் தரப்போகும் பணத்திற்காக எந்த எல்லைக்கும் செல்வேன் என்று களத்தில் குதித்திருக்கும் போட்டியாளர்கள் நேற்று நடந்த நாமினேஷனில் புதுவரவுகளை வச்சு செய்தனர். அதன்படி அவர்களை கூண்டோடு ஸ்மால் பாஸ் வீட்டுக்குள் அனுப்பிய கையோடு நாமினேஷனுக்கும் கொண்டு வந்தனர்.
அந்த வகையில் அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், அன்ன பாரதி, ஆர் ஜே பிரவோ, மணி, மாயா, ஐஷு ஆகிய ஏழு பேரும் தற்போது நாமினேஷனில் சிக்கி இருக்கின்றனர். அதைத்தொடர்ந்து தங்களுக்கு பிடித்தவர்களை காப்பாற்ற ஆடியன்ஸ் வாக்குகளை அள்ளி கொடுத்து வருகின்றனர். ஆனால் தற்போதைய ஓட்டிங் நிலவரப்படி பிக்பாஸ் வரலாற்றிலேயே நடக்காத ஒரு சம்பவம் நடந்துள்ளது.
என்னவென்றால் எப்போதுமே புதுவரவாக வீட்டுக்குள் வருபவர்களுக்கு போகப் போகத்தான் ஆதரவு கிடைக்கும். ஆனால் முதல் நாளிலேயே விஜே அர்ச்சனா ரசிகர்களின் ஆதரவை பெற்று இந்த ஓட்டிங் லிஸ்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறார். அதன்படி ஒரு நாளிலேயே 20178 வாக்குகளை பெற்று அவர் கெத்து காட்டி வருகிறார்.
இதற்கு முக்கிய காரணம் நேற்று அவரை பழைய போட்டியாளர்கள் ராகிங் என்ற பெயரில் பயங்கரமாக கலாட்டா செய்தது தான். அதை தொடர்ந்து சிறு குழந்தை போல் அழுத அர்ச்சனாவை பார்க்கும் போது அனைவருக்கும் பரிதாபம் ஏற்பட்டது. அந்த அனுதாபமும், அழுகாச்சியும் தான் அவருக்கு இவ்வளவு வாக்குகளை பெற்றுக் கொடுத்திருக்கிறது.
இவருக்கு அடுத்தபடியாக தினேஷ், மணி, மாயா, பிரவோ, கானா பாலா ஆகியோர் இருக்கும் நிலையில் ஐஷு மிக குறைந்த ஓட்டுகளை பெற்றுள்ளார். இதிலிருந்து ரசிகர்கள் அவரை வெளியேற்றுவதற்கு எவ்வளவு துடிப்புடன் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த அளவுக்கு ஐஷு பச்சோந்தி போல் நேரத்திற்கு ஒரு முகம் காட்டி பார்ப்பவர்களை கடுப்பேற்றி வருகிறார்.
அதிலும் அவர் கடுமையான போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிக்சனை காதல் மயக்கத்திற்கு தள்ளி வீக்காக மாற்றி இருக்கிறார். இதுவே அவருக்கான பின்னடைவாக மாறியுள்ளது. அந்த வகையில் விஜே அர்ச்சனா தற்போது அதிகமாக வாக்குகளை பெற்றுள்ள நிலையில் இனி வரும் நாட்களிலும் அவர் இதே போல் தொடர்ந்து முன்னிலையில் வகிப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.